நாட்டில், முதல் தடவையாக கோவிட் -19 தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய 5 பேருக்கு தண்டப்பணம் விதிப்பு!

16 Jul, 2020 | 12:22 PM
image

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்துக்கு 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி பணிமனைக்கு உள்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோகர் ஒருவரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் கீழ் 5 குடியிருப்பாளர்கள் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

தம் மீதான குற்றச்சாட்டை 5 குடியிருப்பாளர்களும் ஏற்றுக்கொண்டனர். அதனால் அவர்கள் ஐவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார்.

நாட்டில்,  திண்மக் கழிவுகளை பொது இடத்தில் வீசியதால் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சுகாதாரத் துறையினரால் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51