கொரோனா தொடர்பில் தவறான செய்தி பிரசுரம் : தேசிய பத்திரிகை ஒன்றுக்கு எதிராக விசாரணை! - மேலும் இரு சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பிலும் சி.ஐ.டி. விசாரணை

16 Jul, 2020 | 12:21 PM
image

 (எம்.எப்.எம்.பஸீர்)

 தற்போதைய கொரோனா பரவல் நிலைமை தொடர்பில், சமூகத்தை  பீதிக்கு உள்ளாக்கி அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வண்ணம் தவறான, போலியான செய்திகளை பிரசுரித்தமை தொடர்பில்  தேசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஒருவர் சி.ஐ.டி.யினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  'கந்தகாடு கொவிட் கொத்தணியில் நேற்று அதிகளவானோர் கண்டியில்' என தலைப்பிட்டு நேற்றைய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பில் இந்த விசாரணைகளை சி.ஐ.டி. ஆரம்பித்ததாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த பத்திரிகை செய்திக்கு மேலதிகமாக இரு சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாகவும், இவ்வாரு மக்களை வீணாக பீதிக்கு உள்ளாக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புவோர் தொடர்பில் செயர்பட சி.ஐ.டி.யின் 3 குழுக்கள் நியமிக்கப்ப்ட்டுள்ளதாகவும் அதில் 26 அதிகாரிகள் உள்ளடக்கப்ப்ட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

 ' குறித்த பத்திரிகை செய்தி தொடர்பில்  அப்பத்திரிகையின் ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தியை எழுதியவரை சி.ஐ.டி.க்கு அழைத்து விசாரித்தோம். அதன்போது அந்த செய்தி தவறானது எனவும், அதற்கான பிழை திருத்தை இன்று வெளியிடவும் அவர்கள் இணங்கினர்.

அதே போல் இந் நாட்களில் இலங்கை வரைப் படம் ஒன்று சமூக வலைத் தளங்களில்  பரவலாக பகிரப்படுகின்றது. அந்த வரப்படத்தில் சிவப்பு நிற புள்ளிகளால் இலக்கங்களை அடையாளம் காட்டி, அப்பகுதிகளில் கந்தகாடு கொரோனா தொற்றாளர்கள் நடமாடியுள்ளதாகவும் அதனால் அப்பகுதிகளுக்கு செல்வதை தடுக்குமாரும் கோரும் வகையில் தகவல்கல் பகிரப்பட்டுள்ளன. எனினும் அது பொய்யானது. அந்த வரைப்படம் சுகாதார துறையின் வரைப்படம் அல்ல.

 அது ஒரு தனியார் நிறுவனம் தங்களது கிளைகள் உள்ளிட்ட விபரங்கலை சித்திரித்து வெளியிட்டுள்ள வரைப்படம். அதனை தவறாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொரோனா தொடர்பில் பீதியை கிளப்பியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த நிலையில்  4 பேரின் வாக்கு மூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

 அத்துடன் டுவிட்டர் சமூக வலைத் தளத்தில், கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுக்குள்ளானவர்கள் என குறிப்பிட்டி ஒரு பெயர் பட்டியல் பகிரப்பட்டு வந்தது. அது தொடர்பிலும் விசாரணைச் செய்தோம். உண்மையில் அது கடந்த 4 ஆம் திகதி போயா தினத்தன்று கந்தகாடு முகாமில் உள்ளவர்களை பார்வை இட அவர்களது உறவினர்களுக்கு அனுமதிக்கப்பட்ட போது, அங்கு பெறப்பட்டு உறவினர்களின் பெயர் பட்டியலாகும்.

 தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் பிரகாரம், ஒரு நோய் நிலை தொடர்பில் ஒருவரின் தனிப்பட்ட விபர்ங்களை வெளியிட முடியாது. அப்படி இருக்கையில்  ஒரு பெயர் பட்டியலை அவர்களை கொரோன தொற்றாளர்களாக சித்தரித்து இவ்வாரு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை நடக்கின்றது. அதன் பின்னனியில் ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணை தொடர்கின்றது.

 பொது மக்களை பீதிக்கு உள்ளாக்கும் வகையில் இவ்வாறு பகிரப்படும், பிரசுரிக்கப்படும் போலியான தகவல்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 ஆவது அத்தியாயத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படுமிடத்து அவருக்கு 2 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.' என  தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55