சுற்றுலாப் பயணிகளுக்காக தனது எல்லைகளை திறந்தது மாலைதீவு !

Published By: Jayanthy

16 Jul, 2020 | 06:28 AM
image

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக நாட்டை முடக்கியதுடன் தனது எல்லைகளை மூடிய மாலைதீவு மீண்டும் தனது எல்லையை திறந்துள்ளது.

Image

இதன் முதல் நடவடிக்கையில், கட்டார் ஏர்வேஸ் விமானம் 107 வெளிநாட்டுப் பிரஜைகளையும் 27 மாலைதீவு பிரஜைகளையும் ஏற்றிகொண்டு நேற்று புதன்கிழமை காலை மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. 

மார்ச் 27 அன்று மாலைதீவு தனது எல்லைகளை மூடியதிலிருந்து இது சுற்றுலாப் பயணிகளின் முதல் வருகையாக பதிவாகியுள்ளது.

Image

இது குறித்து மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். 

குறித்த பதிவில், 

,

“மாலைதீவில் சூரியன் மீண்டும் பிரகாசிக்கிறது. எங்கள் எல்லைகள் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. முதல் விமானம் தரையிறங்கியது. ” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலைதீவில் 2,801 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 2,302 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் மரணமடைந்துள்ளனர். அண்மையான காலப்பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17