16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில் : ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்கிறார் அனில் ஜாசிங்க! முழு விபரம் இதோ

15 Jul, 2020 | 11:31 PM
image

(எம்.மனோசித்ரா)

முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. இவ்வாறு கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை. ஆனால் இராஜாங்கனை போன்று அவதானத்திற்குரிய பிரதேசங்கள் தற்போதும் முடக்கப்பட்ட நிலைமையிலேயே உள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்படாவிடினும் அங்குள்ள நபர்களுக்கு வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போன்று வெளியாட்களுக்கும் அந்த பிரதேசத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று இரவு 11.00  மணி வரை புதிதாக 6 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் இறுதியாக இனங்காணப்பட்டவர் கந்தக்காடு கொரோனா வைரஸ் நோயாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் ஆவார். மேலும்  ஒருவர் எமிர் இராச்சியத்திலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் ஆவார். ஏனைய நால்வரும் கட்டாரிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.

 இதனையடுத்து நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2671 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 659 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு 2001 பேர் குணமடைந்துள்ளனர். அத்தோடு தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் 150 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விடயங்கள் பற்றி  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெளிவுபடுத்துகையில்,

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர்

குருணாகல் பிரதேசத்தில் 73 பேரும் நிக்கோய பிரதேசத்தில் 73 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற ஏதெனுமொரு கூட்டத்திற்கு வருகை தந்தவர்களாவர். அதே போன்று குண்டசாலை பகுதியில் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குண்டசாலையில் இனங்காணப்பட்ட நோயாளருடன் தொடபுகளைப் பேணிய கேகாலை மாவட்டத்திலுள்ள சில குடுஷ;ம்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை - அபரெக்க பிரதேசத்தில் சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பி.சி.ஆர். பரிசோதனைகள்

திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் இராஜாங்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 395 பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்கள் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று ராகமை தனியார் வைத்தியசாலையிலும் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை குண்டசாலை பகுதியில் 101 , கொட்டுகொர பகுதியில் 74 தந்திரிமலை பகுதியில் 267 மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு வருகை தந்த சுமார் 200 பேர் , இராஜாங்கனையில் 150 பேர் என்போருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

16 மாவட்டங்களில் 2800 பேர் சுய தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொவிட்-19 வைரஸ் பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 16 மாவட்டங்களில் சுமார் 2800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு , கம்பஹா, களுத்துறை , அநுராதபுரம் , பொலன்னறுவை , காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , இரத்தினபுரி , கண்டி , மாத்தளை , கேகாலை , புத்தளம் , யாழ்ப்பாணம் , குருணாகல் மற்றும் மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ளவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெல்மடுல்லை பிரதேசத்தில் விற்பனை நிலையம் மூடப்பட்டது

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரியொருவர் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்ற விற்பனை நிலையமொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெல்மடுல்லலை நாரகொட பகுதியைச் சேர்ந்த 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கம்பஹாவில் 80 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு

கம்பஹாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் வருகை தந்த பகுதியைச் சேர்ந்த 80 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவையாற்றிய பண்டாரவத்த மற்றும் வெரெல்லவத்த பகுதியைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் சென்ற இடங்களிலுள்ளவர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்குருகொட பிரதேசத்தில் சில கடைகள் பூட்டு

இங்குருகொட பிரதேசத்தில் ஹோட்டலொன்றும் கந்துருவெல மற்றும் இங்குருகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரியொருவர் இந்த இடங்களுக்கு வந்துள்ளமையின் காரணமாகவே தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்காக இவை மூடப்பட்டுள்ளன.

தியத்தலாவையில் 7 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் தொற்றுக்குள்ளான இராணுவ சிப்பாய் சென்றதாகக் கூறப்படும் தியத்தலாவை பகுதியைச் சேர்ந்த 7 பேர் இன்றைய தினம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44