வைரஸை கட்டுப்படுத்த இராணுவத்தால் முடியாது - சம்பிக்க

15 Jul, 2020 | 08:22 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலைக்கான ஆரம்ப அறிகுறிகள் தற்போது தோன்றியிருக்கின்றன. இதற்குக்காரணம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரசேவை உத்தியோகத்தர்களிடம் பொறுப்புக்கள் கையளிக்கப்படாமையே ஆகும். பாதெனியவின் தலைமையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை போர்க்களத்திற்கு அனுப்பியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியிருக்கிறார். 

அதுமாத்திரமன்றி நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தலைதூக்க ஆரம்பித்துள்ளமைக்கு ஜனாதிபதியும், பிரதமருமே பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டை நிர்வகிப்பதற்கென்று ஒரு முறை இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் நாலாபக்கமும் பரவிக்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடிநிலையை எதிர்கொள்வதில் சுகாதாத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், வைத்தியநிபுணர்களுக்கும், ஏனைய சுகாதாரசேவை உத்தியோகத்தர்களுக்கும் முதலிடம் வழங்கப்படாமல் பொருத்தமற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.

நாட்டில் மூன்று தசாப்தகால யுத்தமொன்று நடைபெற்றது. வைத்தியநிபுணர் அநுருத்த பாதெனியவின் தலைமையில் அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை யுத்தகளத்திற்கு அனுப்பியிருந்தால் இப்போது யுத்தம் முடிவிற்கு வந்திருக்குமா? அதேபோன்று நாட்டில் தொற்றுநோயொன்று பரவும் போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் பொறுப்பை வழங்கக்கூடாது. 

மாறாக வைத்திய நிபுணர்கள், சுகாதார அதிகாரிகளிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். யுத்தம் செய்வதற்காகவே சவேந்திர சில்வா இருக்கிறார். எனினும் கொரோனா வைரஸ் பரவல் என்பது யுத்தத்தைப் போன்று கையாளப்படக்கூடியதன்று. இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல்தான் இன்றளவிலே ராஜபக்ஷாக்கள் கொரோனாவிற்கு நாட்டைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.

நாட்டிலேற்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் பரவல் அலைக்கு ஜனாதிபதியும், பிரதமருமே பொறுப்புக்கூற வேண்டும். உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவிய போது விமானநிலையங்களை மூடவேண்டும் என்று சிந்திக்குமளவிற்கு ஆற்றலற்ற, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தேர்தலை விரைந்து நடத்துவதற்குத் திட்டமிட்ட அவர்களிருவருமே 70 நாட்களுக்கும் அதிகமான காலம் மக்களை வீடுகளில் முடக்கியமைக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

அதேபோன்று தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் அவர்கள் இருவருமே பொறுப்பாளிகளாவர். ஏனெனில் மறைந்த முன்னாள் அமைச்சர் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தின் போது ஒட்டுமொத்த தனிமைப்படுத்தல் சட்டங்களையும் மீறி அவர்கள் செயற்பட்டார்கள். அதனைத் தடுக்காமலிருந்துவிட்டு, இப்போது தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பின்பற்றுமாறு அனில் ஜாசிங்கவினால் எமக்குக்கூற முடியுமா? பொலிஸ் ஊடகப்பேச்சாளரால் மக்களுக்கு அறிவுறுத்த முடியுமா? நாட்டுமக்கள் அனைவரும் பொறுமையாக தனிமைப்படுத்தல் சட்டங்களைக் கடைப்பிடித்து செயற்பட்ட தருணத்தில், தொண்டமானின் இறப்புடன் அரசியல்வாதிகளால் இந்தச் சட்டங்களனைத்தும் கேலிக்கூத்தாக்கப்பட்டது. எனவே கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலைக்கு ஜனாதிபதியும் பிரதமருமே முழுவதுமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44