கோத்தாபய, மகிந்த, ரணில், சஜித் ஆகியோர் இனவாதிகளே : தமிழர்களுக்கு இலகுவில் எதனையும் வழங்க மாட்டார்கள் என்கிறார் பிரபாகணேசன்

Published By: Digital Desk 4

15 Jul, 2020 | 07:26 PM
image

கோத்தாபய, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமிசங்க, சஜித் பிரேமதாச ஆகிய அனைவருமே சிங்களப்பேரினவாதிகள் தான். அவர்கள் தமிழர்களிற்கு எதனையும் இலகுவில் வழங்கமாட்டார்கள் என்று ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னிமாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான பிரபாகணேசன் தெரிவித்தார்.

வவுனியா நெடுங்கேணியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் வெற்றிபெற்றதும் வீட்டுதிட்டத்திற்கான நிதியை 15இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதுடன், அரைகுறையாக கட்டப்பட்டுள்ள வீடுகளிற்கு 4 இலட்சம் ரூபாயை அரசாங்க நிதியாக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளேன்.

வன்னியில் இதுவரை தொழிற்சாலைகளை அமைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை. அதனை செய்தாலே இங்கு வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள கூடியதாகவிருக்கும். எனவே எனது வெற்றிக்கு  பின்பு ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் அரச மற்றும் தனியார் துறைசார்ந்த தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

அத்துடன் வடக்கிலுள்ள அரச வேலைவாய்ப்புகளிற்கு மாவட்டங்களிற்குள்ளே தேர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர் அதனை நிறைவேற்றிதருவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் வன்னி மாவட்டத்திலே நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தாலும் அவை புனரமைப்பு செய்யபடவில்லை. இதனால் உரியவகையில் விவசாயத்தினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை புனரமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. விவசாயிகள் தமக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அந்தவிடயம் தொடர்பாக கூடிய கவனமெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. 

வன்னியில் பல இடங்களில் உப குடும்பங்களிற்கான நிலம் இல்லாத நிலையில், கடந்த அரசில் கனீபா என்பரை அரச அதிபராக நியமித்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் அவர் மூலம் 1800 ஏக்கர் நிலங்களை முஸ்லீம்களிற்கு எழுதி கொடுத்துள்ளதாக தகவல் எமக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக விசாரணைகளும் இடம்பெறுவதாக அறிகின்றோம். இது தொடர்பாக பிரதமர் மகிந்தவிடம் நேரடியாக சென்று தெரிவித்து அரச அதிபரான கனீபாவை மாற்றம் செய்துள்ளேன். அது எமக்கு கிடைத்த வெற்றி.

கடந்த காலங்களிலே நீங்கள் வாக்களித்தவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்று தெரியிவில்லை. நான் அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றிற்கு வருகின்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவருந்துவார்கள். 

அங்கு எவ்வளவுதான் உண்டாலும் அதற்கான தொகை 30 ரூபாய்தான். அந்த நேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகைதந்தால் கையொப்பம் பெறுவதற்காக கோப்புகளை எடுத்துகொண்டு ஓடுவார்கள்,நான் அமைச்சராக இருந்தபோது என்னிடமும் வந்து கையொப்பம் பெறுவார்கள். 

அந்த கோப்புகளை திறந்து பார்த்தால் அது அவர்களது உறவினர்களிற்கு தொழிலை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பமாக இருக்கும் அல்லது எரிபொருள் நிரப்பு நிலையத்தினை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிபத்திர விடயமாக இருக்கும். 

இங்கு வீரவசனம் பேசுபவர்கள். மகிந்தவிடமோ அல்லது அமைச்சர்களிடமோ சென்று சேர் சேர் என்று அழைப்பார்கள். நான் அப்படி அழைத்ததும் அல்ல அழைக்கவேண்டிய தேவையும் இல்லை. 

கோத்தாபய, மகிந்த, ரணில், சஜித் ஆகிய அனைவருமே சிங்கள பேரினவாதிகள் தான். நல்லவர்கள் அல்ல.

தமிழர்களிற்கு எதனையும் இலகுவில் கொடுக்கமாட்டார்கள். ஆனால் எம்மால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இந்தநாட்டில் வரமுடியாது. எனவே இந்த இனவாதிகளிடம் இருந்து எமது மக்களிற்கு தேவையான விடயங்களை பெற்றுக்கொள்ள கூடியவர்களை பாராளுமன்றம் அனுப்பினாலே மாற்றம் ஒன்று ஏற்படும். எனவே அதனை உணர்ந்து  சரியானமுறையில் வாக்களியுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58