தேடல் பொறிகளில் அனுமதியின்றி வரும் ஆபாச விளம்பரங்களுக்கு கண்டனம்

Published By: Raam

06 Jul, 2016 | 01:10 PM
image

பிரபல இணையதள தேடல் பொறிகளான கூகுள், யாஹு, மைக்ரேசோப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆபாச விளம்பரங்களை தங்களது இணையதளங்களில் வெளியிட்டு வருவதற்கு இந்திய  உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு மனு அளிக்கும்படி மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சாபு மேத்யூ என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், இணையதளங்களில் பாலியல் கருவிகள், மருத்துவமனைகள் போன்ற தகவல்கள் அடங்கிய விளம்பரங்களை கூகுள், யாஹு, மைக்ரோசாப்ட் போன்ற தேடுதல் இயந்திரங்களில் இலவசமாக காண முடிகிறது. இதை தடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சந்திரா பந்த், அடங்கிய குழு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தகைய ஆபாச விளம்பரங்களை தொகுத்து வழங்கி வரும் கூகுள், யாஹு, மைக்ரேசாப்ட் உள்ளிட்ட தேடுதல் இயந்திரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும், ‘‘சட்டத்தை இந்த இணையதள நிறுவனங்கள் தொடர்ந்து மீறி வருகிறதா? இத்தகைய விளம்பரங்களை முற்றிலும் தடுக்க முடியாதா? விளம்பரம் என்ற பெயரில் வெளியாகும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. 

எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான தேடுதல் இயந்திர நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அத்துடன் ஆபாச விளம்பரங்களை உடனடியாக எப்படி தடுத்து நிறுத்துவது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது. 

இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டது. 

கூகுள் இணையதளத்தில் தகவல்களைத் தேடுவோரின் அனுமதியில்லாமல் பாலியல் ஆபாசப் படங்கள் கொண்ட இணைய தளங்கள் தோன்றுவது குறித்து இணையதள வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52