சுக­வீ­ன­முற்ற நிலையில் வெளி­நாட்­டுக்கு சிகிச்சை பெறு­மு­க­மாக சென்­றி­ருந்த மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்­பு ஜோசப் ஆண்­டகை தற்­பொ­ழுது நாடு திரும்­பு­வ­தற்­கான ஆய்த்­தங்­களை மன்னார் ஆயர் இல்லம் மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன் திடீ­ரென சுக­வீ­ன­முற்ற மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல­திக சிகிச்­சைக்­காக சிங்­கபூர் நாட்­டுக்கு அழைத்து செல்­லப்­பட்டு அங்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது.

மூன்று மாதங்­க­ளாக சிங்­க­பூரில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­ட­கையை இப்­பொ­ழுது இலங்­கைக்கு அழைத்து வரு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக மன்னார் ஆயர் வட்­டாரம் தெரி­விக்­கின்­றது.