பொறுப்­பு­க­ளை இதய சுத்­தி­யு­டன் செய்து காட்­டுவேன் : இந்­தி­ரஜித்

Published By: Robert

06 Jul, 2016 | 10:26 AM
image

மத்­திய வங்­கியின் ஆளுநர் என்ற வகையில் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­துவ­தற்குத் தேவை­யான அனைத்து செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்­பேன் இதற்­கென பிர­தான கட­மை­க­ளையும் தனக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள பொறுப்­பு­க­ளையும் நம்­பிக்­கை­யு­டனும் என் இதய சுத்­தி­யு­டனும் செய்து காட்­டுவேன் என மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி குறிப்­பிட்டார்.

மேலும் இந்­நாட்டின் அனைத்து வித­மான நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யேயும் நம்­பகத் தன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அனை­வ­ரும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்றவகையில் மத்­திய வங்­கி கோப் குழு தொடர்­பான அனைத்­து­வி­­த­மான விசா­ர­ணை­க­ளுக்கும் பூரண ஒத்­து­ழைப்பு வழங்கும் எனவும் அழுத்­தங்­களைக் கடந்து இந்­நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு பங்­க­ளிப்பு வழங்கும் எனவும் உறு­தி­ய­ளித்தார்.

இலங்கை மத்­திய வங்­கியில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மத்திய வங்­கியின் புதிய ஆளு­ந­ரான இந்­தி­ரஜித் குமா­ர­சு­வா­மியின் கன்னி ஊடக சந்­திப்பு இடம்­பெற்­றது. இதன்­போது கருத்துத் தெரி­வித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

எனது நிய­மனம் ஒரு இக்­கட்­டான சூழ்­நி­லையில் எனக்கு வழங்­கப்­பட்­டது என்­பதை நான் உணர்வேன். இந்­நி­லையில் குறித்த சந்­தர்ப்­பத்தை இலங்­கை­யி­லுள்ள மக்­களின் மனதை வென்­றெ­டுப்­ப­தற்­கான ஒரு தரு­ண­மா­கவே நான் நினைக்­கின்றேன். மத்திய வங்கி என்­பது மிகவும் நம்பிக்கை வாய்ந்­ததும் நிதி தொடர்பில் பூரண பொறுப்பு மிக்­க­து­மான ஒரு நிறு­வ­ன­மா­கும். அந்­த­வ­கையில் எனது கடமை பொறுப்­பு­களை நிறை­வேற்­றும்­­போது மக்­க­ளுக்­காக செயற்­பட வேண்­டியவனாக உள்ளேன்.

இலங்­கையின் எதிர்­கால நோக்கு தொடர்­பிலும் நிலை­யான பொருளா­தார அபி­வி­ருத்­தியை விருத்தி செய்­­வத­ற்கும் பல முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. அந்­த­வ­கையில் பொரு­ளா­தார கொள்­கை­­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பல திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவற்றை செயற்­ப­டுத்­து­வ­தற்கு மத்­திய வங்­கியே பிர­தான நிறு­வ­ன­மாக செயற்­படும் என்­பதில் ஐய­மில்­லை.

தற்­போது அர­சாங்கம் பல பொரு­ளா­தாரக் கொள்­கை­களை அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் இலங்­கையின் பொரு­ளா­தாரம் சரி­யான பாதையில் பய­ணிப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஆனால் அது நிலை­யான அல்­லது நீண்­ட­கா­ல பய­ணத்தை நோக்கிச் செல்­கின்­றதா என்­பது கேள்­விக்­கு­றி­யா­க­வுள்­ள­து. எனவே, நாம் நிலைத்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்­தியை நோக்கி ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்­டும்.

வர­லாற்றை நோக்­கும்­போது நாம் அபி­வி­ருத்­தியில் எந்­­நே­ரத்­திலும் பின்­தங்­கி­யி­ருக்­க­வில்லை. குறிப்­பாக 1950 ஆம் ஆண்­டுக்­குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் எமது அபி­வி­ருத்­தியில்­ பாரிய வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. ஆயினும் யுத்­தத்­தி­ற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பொரு­ளா­­தாரம் சரி­பா­­தியில் சென்­ற­போதும் பல சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அத்­தோடு தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழ் ஓர் அர­சியல் சாதகத் தன்மை ஏற்­பட்­டுள்­ளது. எனவே தற்­போது நாம் பொரு­ளாதார அபி­வி­ருத்­தியை நோக்கி இல­கு­வாகப் பய­ணிக்கக் கூடிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது. நாம் அடுத்­த­கட்டம் என்ன செய்ய வேண்டும் என்­பதை நோக்க வேண்டும். எமக்கு சீனா, இந்­தியா, ஜப்பான், சிங்­கப்பூர் உள்­ளிட்ட பல நாடு­க­ளும் அபி­வி­ருத்­தி செய்­­வதில் பல ஒத்­து­­ழைப்­பு­களை வழங்கி வருகின்­றன.

எனவே என்னால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை ஸ்தி­ரப்­ப­டுத்த முடியும் என நம்புகின்றேன். அதுவே மத்­திய வங்­கியின் குறிக்­கோ­ளா­கவும் உள்­ள­து. நாட்டின் பொரு­ளா­தா­ர­த்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தை தான் சவா­லாக ஏற்­றுக்­கொள்­கின்றேன். பொரு­ளா­தார அடிப்­ப­டை­களை அறி­முகப்­ப­டு­த்தி பொரு­ளா­தார ஸ்தி­ரத்­தன்­மையை விருத்­தி­செய்ய முடியும் என நினைக்­கின்­றேன்.

கேள்வி: மிகப்­பெ­ரி­ய­ளவில் மோசடி செய்த குற்­றச்­சாட்டில் தற்­போ­து அமெ­ரிக்­காவில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்­து­வரும் ராஜ் ராஜ­ரத்­தினத்துக்கும் உங்­க­ளுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூற­மு­டி­யு­மா?

பதில்: அவ­ர் என்­னு­­டைய நண்பர். என்­­னுடன் ஒரே பல்கலைக்­க­ழ­கத்தில் படித்த­வர். அதே­வேளை 10 மாதங்­க­ளாக அவ­ரது நிறு­வ­னத்தின் பொரு­ளா­தார சிக்­கல்கள் தொடர்பில் நான் ஆய்­வ­றிக்­கை­களை தயா­ரித்­துள்ளேன். அவர் பல தன்­னார்வப் பணி­க­ளுக்கு உத­வி­யுள்ளார்.

2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து அவர் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்றார். ஒரு நண்பன் என்ற வகை­யிலும் இலங்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்குப் புலம்­பெ­யர்ந்து சாதித்த வியா­பா­ரி­யா­கவும் நான் அவரை அறி­வேன். சசெக்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆய்வுக் கற்கை­நெ­றிக்­காக நான் பட்­ட­தா­ரி­யாக இருந்­த­போது அவரும் அங்கு கல்வி பயின்றார். அத­ன­டிப்­ப­டையில் எனக்கும் பல்­வேறு உத­வி­களை அவர் செய்­துள்ளார்.

அவர் இலங்­­கையில் கைது­செய்­வதற்கு ஒரு வரு­டத்­திற்கு முன்பே எனக்கு தெரியும். எனது தனிப்­பட்ட வகையில் அவர் எனக்கு நிறைய உத­விகள் செய்­து­ள்ளார். சுனாமி காலத்­தின்­போதும் இலங்­கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பல்வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு நன்­கொடை உத­வி­களை அவர் வழங்­கி­யி­­ருந்தார்.

கேள்வி: தற்­போது உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­மனம் அர­சி­யல்­ சார்­பா­னது. அந்­த­வ­கையில் உங்­களால் அர­சியல் சார்­பற்­ற­வ­ராக செயற்­பட முடியும் என நினைக்­கி­றீர்­க­ளா?

பதில்: எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள இந்தப் பத­வியை அதிர்ஷ்­ட­வ­ச­மாக கிடைத்­த­தென நான் நினைக்­க­வில்லை. முறை­யான அடை­வு­மட்­டத்தின் அடிப்­ப­டையில் குறித்த பத­விக்குத் தகு­தி­யா­னவனாகவே நான் உள்ளேன் என நினைக்­கிறேன். அத்­தோடு மத்­திய வங்­கியை பொறுப்­பு­ணர்­வு­மிக்க வகையில் பேணிப் பாது­காக்க வேண்­டிய கடமை என்­னிடம் உள்­ளது.

தொழில்­நுட்பம், ஏற்­று­மதி தொடர்பில் தற்­போது உரிய கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கி­றது. அத்­தோடு சந்தைப் பொரு­ளா­தா­ரத்தில் அடைய வேண்­டிய பல அபி­­வி­ருத்­­தி திட்­டங்­களை நாம் வரை­ய­றுத்து செயற்­பட வேண்டும். எனக்கு குறித்த பணியை நிறை­வேற்­று­வ­தற்கு தற்­போது சாத­க­மான சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ள­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். ஆயினும் இந்தப் பதவி சவால் மிக்­கது என்­ப­தையும் நான் உணர்­கின்றேன்.

கேள்வி: கோப் குழுவின் விசா­ரணை தொடர்பில் மத்­திய வங்கி இனி­வரும் காலங்­களில் எவ்­வா­றான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்­ளும்?

பதில்: நான் ஏற்­­­க­னவே கூறி­யது போல அனைத்து அரச நிறு­வ­னங்­க­ளி­னதும் உண்­மை­யான மற்றும் பொறுப்­பு­ணர்வு மிக்க செயற்­பா­டுகள் அவ­சி­ய­மான தேவைப்­பா­டாக உள்­ளது. அவ்­வ­கையில் மத்­திய வங்­கியும் அபி­வி­ருத்­திக்­கான சகல ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கும் தற்­போது கோப் குழுவின் விசா­ரணை எம்­மட்­டத்தில் இருப்­பினும் அல்­லது குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு மத்­திய வங்­கி­யினால் எவ்­வ­கை­யான ஒத்­­து­ழைப்­பு­களை வழங்க முடி­யுமோ அதற்­கான பூரண ஒத்­து­ழைப்பை எந்­நே­ரத்­திலும் வழங்­கத் தயா­­ராக இருக்கும்.

கேள்வி: தற்­போது உங்­க­ளுக்­குள்ள பிர­தான சவா­லாக எதனைக் கரு­து­கி­றீர்­கள்?

பதில்: அபி­வி­ருத்­திக்­கான பாதைகள் தற்­போது தெளிவாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் குறித்த அபி­வி­ருத்தி நிலைத்­தி­ருக்கக் கூடியவகையில் அல்­லது தக்­க­வைத்­துக்­ கொள்ளக்கூடிய செயற்­பா­டு­களை மத்­திய வங்கி மேற்­கொள்ள எதிர்­பார்க்­கின்­றது. நாம் பல அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். ஆனால், அவை நிலை­யா­ன­தாக உள்­ளதா என்­பதை அறிய வேண்டும். இதற்கு நிதி­ய­மைச்சும் பல்­வேறு வகையில் எமக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­கின்­ற­து.

கேள்வி: தற்­போது எவ்­வா­றான துணை செயற்­றிட்­டங்­களை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என நீங்கள் நினைக்­கி­றீர்­கள்?

பதில்: இறு­தி­யா­க முன்­வைக்­கப்­பட்ட வரவு செலவுத் திட்­ட­ங்­க­ளுக்கு பின்­ன­ரான காலப்­ப­­கு­தியில் அல்­லது கடந்த ஆறு மாதங்­க­­ளுக்கு மேற்­பட்ட பல்­வேறு பொரு­ளா­தாரக் கொள்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. புதி­தாக நாம் சந்தைப் பொரு­ளா­தா­ரத்தை தேடு­வ­தற்கு அவசி­ய­ங்கள் இல்லை. ஏனெனில் தெற்­கா­சி­யாவில் எந்­நாட்­டுக்கும் இல்­லாத தனிச்­சி­றப்பு இலங்­கைக்கு உள்­ளது. மத்­திய கேந்­திர நிலை­ய­மாக அனைத்து நாடு­க­ளுக்கும் இலகு வர்த்­த­கத்தை மேற்­கொள்ள எமக்கு தகுந்த சூழ்­நிலை உள்­ளது.

கேள்வி: ஆறு வருட காலப்­ப­கு­திக்குள் தொடர்ந்தும் உங்­களால் பணி­யாற்ற முடியும் என நினைக்­கி­றீர்­­க­ளா?

பதில்: ஆறு வருட காலங்­களும் பணி­பு­ரிய வேண்டும் என்ற ஆசை என்­பதை விட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளு­க்­கான ஒத்­­து­ழைப்பில் என்னால் பங்­கெ­டுக்க முடி­யு­மானால் அதற்கு நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். ஆறு வரு­டங்கள் என்­ப­தனை விட நான் ஆளு­ந­ராக இருக்கும் காலப்­ப­கு­தியில் சிறந்த பொரு­ளாதார அபி­வி­ருத்தி திட்­டத்தை மேற்­கொள்ள முடியும் எனக் கரு­து­கிறேன். அத்தோடு மத்­திய வங்­கியின் ஊழி­யர்கள் அனைத்து அரச நிறு­வ­னங்­க­­ளி­லி­ருந்தும் வேறுபட்­ட­வர்கள், திற­மை­யா­ன­வர்கள், அனு­ப­வ­முள்­ள­வர்கள். ஆகவே என் னால் இவர்­களைக்கொண்டு திறம்­பட செயற்­பட முடியும் என்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59