17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு அமெரிக்கா அனுமதி!

Published By: Vishnu

14 Jul, 2020 | 01:19 PM
image

17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கூட்டாட்சி கைதிகளுக்கு மரண தண்டனையை  நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரணதண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன, எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் இன்னும் உள்ளன என்று அமெரிக்காவின் இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதமன்றம் திங்களன்று தீர்ப்பளித்த பின்னர் பல மரணதண்டனை நிறைவேற்றங்கள் தாமதமாகின.

அதாவது அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாநிலத்தைச் சேர்ந்த டேனியல் லீ (வயது 47) என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்தார்.

இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது.

அமெரிக்காவில், 17 ஆண்டுகளுக்கு பின், ஒரு குற்றவாளிக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இது முதல் முறையாகும். 

லீக்கு, விஷ ஊசி செலுத்தி, தண்டனையை நிறைவேற்ற, திங்கள் நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் லீயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ‘கொரோனா‘ வைரஸ் அச்சத்தால், தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்க்க வர முடியாது என்பதால், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி நீதிமன்றை அணுகினர்.

அதனைத் தொடர்ந்து இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதிமன்றம்  மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட இண்டியானா நீதிமன்றின் தீர்ப்பினை தள்ளுபடி செய்தார்.

இதன் மூலம் கொலை குற்றவாளி லீக்கு மரண தண்டனை நிறைவேற்ற அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10