கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 519 பேருக்கு கொரோனா : 800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் - இராணுவத் தளபதி

Published By: Jayanthy

14 Jul, 2020 | 08:39 AM
image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்  800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவர்களில் 419 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும், 11 பேர் சேனாபுரா மறுவாழ்வு மையத்திலும் உள்ள கைதிகள் எனவும், 63 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையதில் பணிபரியும் ஊழியர்கள் எனவும் மேலும் 16 பேர் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் எனவும்  இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரை தொடந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கான நிலையில் இனம் காணப்பட்டனர் இதனையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளடங்களாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இவ் எண்ணின்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது. 

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 29  கொரோனா தொற்றாளையடுத்து  மொத்த  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,646 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா 654 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். 

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் பதிவாகியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56