தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!

Published By: Vishnu

14 Jul, 2020 | 07:53 AM
image

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இம்முறை 705,085 வாக்காளர்கள் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகளை அளிக்க தகுதியுடையவர்கள் ஆவர். 

மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படைகள் முகாம்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலகங்கள் தவிர அனைத்து பொது நிறுவனங்களின் பணியாளர்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் வாக்குச்சீட்டைப் பதிவு செய்ய முடியும்.

இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது. அதன் பிரகாரம் நேற்றும், இன்றும் மற்றும் 15, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.

COVID-19 நெருக்கடியைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தாபல் மூல வாக்காளர்கள் சமூக இடைவெளியை பராமரிக்கவும், முகக் கவசத்தை பயன்படுத்தவும், வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது கைகளைத் தூய்மைப்படுத்தவும், வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவின் போது தங்கள் வாக்குச்சீட்டைக் குறிக்க பேனாவை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தபால் மூல வாக்களார்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் தமது சரியான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19