மனி­த­குலம் மீதான அன்பை வெளிப்படுத்தும் ஈகைத் திருநாள் : ஜனாதிபதி

Published By: Robert

06 Jul, 2016 | 10:18 AM
image

ஒரு உன்­னத சமயக் கோட்­பாட்டைப் பின்­பற்றும் இஸ்­லா­மி­யர்­க­ளினால் மனித சமூ­கத்­திற்கு கிடைத்­துள்ள சிறந்த வாழ்க்கைப் பெறு­மா­னங்கள் குறித்த ஆழ்ந்த புரி­த­லுடன் ரமழான் நோன்பை நிறை­வு­செய்து ஈதுல் பித்ர் ஈகைத் திரு­நாளைக் கொண்­டாடும் இலங்­கை­யிலும் உல­கெங்­கிலும் வாழும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு இந்த வாழ்த்துச் செய்­தியை அனுப்பி வைப்­பதில் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கிறேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,

இயற்­கையின் அரு­ளான இளம் பிறையைக் கண்டு ஆரம்­பிக்கும் ரமழான் நோன்பு புதிய பிறையின் தோற்­றத்­துடன் நிறை­வு­பெ­று­கி­றது. நோன்பு காலப்­ப­கு­தியில் இஸ்­லா­மிய பக்­தர்கள் சொகுசு வாழ்­வி­லி­ருந்து விடு­பட்டு ஆன்­மீக வாழ்வை நோக்கி வரு­வதன் மூலம் ஒரு முன்­னு­தா­ர­ண­மான சமய அனுஷ்­டா­னத்தில் ஈடு­ப­டு­கின்­றனர். பகல் முழுதும் நோன்­பி­ருப்­பதன் மூலம் ஏழை­களின் பசியின் வலியை தாமும் உணர்ந்­து­கொள்ளும் உயர்ந்த மானிடப் பண்பை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

உண்­மையில் இது சமத்­து­வத்தை எடுத்­துக்­காட்டும் ஒரு சர்­வ­தேசப் பிர­க­ட­ன­மாகும். உல­கெங்­கிலும் வாழும் இஸ்­லா­மிய சமூ­கத்­தினர் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து ஒரே நோக்­குடன் பேரா­சை­களை தள்­ளி­வைத்து மானி­டத்­திற்கு வளத்­தையும் தெளி­வான பன்­மைத்­து­வத்­தையும் சேர்க்கும் வகையில் பரஸ்­பர மரி­யாதை, சமா­தானம், நல்­லி­ணக்கம், தாரா­ளத்­தன்மை மற்றும் ஏழை­க­ளுக்கு உத­வுதல் என்­ப­வற்றின் ஊடாக மனித குலத்தின் மீதான அன்­பையும் கரு­ணை­யையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

இறை­வ­னுக்கும் மனி­த­னுக்கும் இடை­யி­லான நெருங்­கிய உறவைக் குறிக்கும் வகையில் உட­லி­னாலும் உள்­ளத்­தி­னாலும் அமைந்த ஆன்மீக தூய்மையை அடையாளப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு அவர்களது பிரார்த்தனைகள் வெற்றியளிக்க எனது நல்வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48