குப்­பைக்குள் போனாலும் குண்டுமணி குண்­டு­ம­ணி­தான் 

09 Dec, 2015 | 08:48 AM
image

குப்­பைக்குள் போனா லும் குண்­டு­மணி குண்­டு­ ம­ணிதான். மக்கள் வீசி­யது குண்­டு­ம­ணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்­தி­ருப்­பதோ குப்­பை­யைத்தான் என்­பதை புரிந்து கொள்­ளுங்கள் என்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்பில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற கட்­சியின் கூட்­டத்தில் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் குறித்து கருத்து தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ர­வாக குப்பைத் தொட்­டிக்குள் போடப்­பட்ட ஆனந்­த­சங்­க­ரியும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் இருக்­கின்­றனர் என்றும் கூறி­யி­ருந்தார். இக் கூற்­றுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் நேற்று விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே கூட்­ட­ணியின் செய­லாளர் வீ.ஆனந்த சங்­கரி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

அண்­மையில் தமி­ழ­ரசு கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கி­டையில் மட்­டக்­க­ளப்பில் நடந்த கலந்­து­ரை­யா­டலில் சம்­பந்தன் குப்பைத் தொட்­டியில் மக்கள் என்னை போட்­டு­விட்­ட­தாக கூறி­யது அவ­ரது பெரும் ஆராய்ச்­சியின் பின் கண்­டு­பி­டித்­த­துபோல் தெரி­கி­றது. ஆனால் அவரின் ஆராய்ச்­சியில் குப்­பைக்குள் விழுந்­தது குண்­டு­ம­ணிதான் என்­பதை கண்டும் காணா­த­துபோல் நடிக்­கிறார். இது­வரை காலமும் அவ­ருக்கு பல்­வேறு விடங்கள் சம்­பந்­த­மாக பல கடி­தங்கள் எழு­தி­யி­ருந்தேன். அவற்­றிற்கு ஒன்­றிற்­கேனும் பதில் எழுத திரா­ணி­யற்­றவர், விக்­னேஸ்­வரன் சம்­பந்­த­மாக கூறப்­பட்ட கருத்­துக்கு அவ­சரம் அவ­ச­ர­மாக பொருத்­த­மற்ற உதா­ரணம் தரு­வது அவரின் அந்­தஸ்த்­துக்கு ஏற்­ற­தல்ல.

இரா.சம்­பந்தன் அவர்­களை நான் ஏறக்­கு­றைய 45 ஆண்­டு­க­ளாக நன்­க­றிவேன் அவ­ருடன் பழ­கி­யு­முள்ளேன். அவர் இன்­று­வரை வகிக்கும் பத­விகள் நியா­ய­மாக கிடைத்­த­னவா? தகுதி அறிந்து வழங்­கப்­பட்­டதா? அல்­லது வேறு வழி­களால் கிடைத்­ததா? என்­பது பற்றி நான் தெரி­விக்கத் தேவை­யில்லை. அவ­ரைப்­பற்­றிய பல விட­யங்கள் என்னால் விமர்­சிக்க முடியும். தற்­போ­தைக்கு ஒரு­சில விட­யத்தைப் பற்றி ஆராய்வோம். எஞ்­சி­யவை பின்பு.

ஆனை­யி­றவு முகாமை அரச படை­க­ளிடம் திருப்பிக் கொடுக்க வேண்­டு­மென்று ஜப்பான் தூதுவர் அகா­சி­யிடம் நான் கேட்­ட­தாக என்­மீது குற்றம் சுமத்தி, இயங்­கா­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் திரு­கோ­ண­மலை கிளையை கூட்டி என்­மீது நம்­பிக்­கை­யில்­லாத பிரே­ர­ணையை நீங்கள் கொண்­டு­வந்­தது ஞாப­க­மி­ருக்கும். நான் அப்­படி சொன்னேன் என்­பதை உறு­திப்­ப­டுத்தி அவரோ அல்­லது அவ­ருடன் சேர்ந்து செயற்­பட்ட சிறிஸ்­கந்­த­ரா­சாவோ திரு­கோ­ண­மலை காளி­கோ­யிலில் சத்­தியம் செய்­வார்­களா? இரா.சம்­பந்தன் பத்­த­ர­காளி மீது மிக்க நம்­பிக்கை கொண்­டவர் என்­ப­தால்தான் இதனை கேட்­கிறேன்.

2004ஆம் ஆண்டு நடந்த பொதுத்­தேர்­தலில் 95சத­வீத வாக்­கு­களை பெற்று 22 ஆச­னங்­களை கைப்­பற்றி தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை தோற்­க­டித்­தமை உண்­மை­யான வெற்­றியா அல்­லது மோசடி மூலம் கிடைத்­ததா?

அத்­தேர்­தலில் காலையில் வெல்­லா­த­வர்கள் மாலையில் வெல்ல வைக்­கப்­பட்­டமை தொடர்­பாக உங்­க­ளுக்குத் தெரி­யுமா அல்­லது தெரி­யாதா? அவர் யாரென்­பதை பகி­ரங்­க­ப­டுத்­து­வீர்­களா? ஜன­நா­ய­கத்தை பாது­காத்­து­வந்த ஒரு பழம்­பெரும் அர­சியல் கட்­சியை முற்­றாக அழிக்க முயற்­சித்­தமை ஞாபகம் உண்டா.

நீங்­களும் ஒரு சக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கனடா, லண்டன் போன்ற நாடு­க­ளுக்குச் சென்று புலம் பெயர்ந்த மக்­களால் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கென சேர்த்த பணம் எவ்­வ­ளவு என்­ப­தையும் என்ன செய்­தீர்கள் என்­ப­தையும் மக்­க­ளுக்கு அறியத் தரு­வீர்­களா? தேர்­த­லுக்­கென அந்த பணம் கொடுக்­கப்­பட்­டி­ருந்தால் தேர்­த­லுக்­காக எவ்­வாறு எவ்­வ­ளவு செல­வ­ழிக்­கப்­பட்­டது என்­பதை தெளி­வாக தெரி­விக்­கவும்.

கடந்த தேர்­தலில் பல தில்­லு­முல்­லுகள் நடந்­த­தாக நம்­பக்­கூ­டிய வகையில் செய்­திகள் அடி­ப­டு­கின்­றன. எதிர்­கட்சி தலைவர் என்­ற­வ­கையில் அது­பற்றி புரண விசா­ர­ணையை முன்­னெ­டுக்க முயற்­சித்­தீர்­களா?

05-.12.-2001 ஆண்டு நடந்த பொதுத்­தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முடி­வுக்கு முர­ணாக திரு.துரை­ரட்­ண­சிங்கம் அவர்­களை தன்­னிச்­சை­யாக தெரிவு செய்­தீர்­களே அதன் மர்மம் என்ன? மீண்டும் அவரை கடந்த 2015ஆம் ஆண்டு தெரிவு செய்­தீர்­களே அத்­தெ­ரிவின் பெரிய மர்மம் என்ன? இதுதான் நீங்கள் காப்­பாற்­றி­வரும் ஜன­நா­ய­கமா?

சிங்­கக்­கொ­டியை மகா­கா­ளியின் கொடி­யாக மாற்­றிய பெரு­மைக்­கு­ரி­யவர் அல்­லவா நீங்கள். 1965ஆம் ஆண்டு கரைச்சி கிரா­ம­சபை தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்ட காலத்­தி­லி­ருந்து இன்­று­வரை 50 ஆண்­டு­க­ளுக்கு மேல் எந்த நிகழ்ச்­சி­க­ளிலும் சிங்கக் கொடியை ஏற்­றா­தவன் நான்.

இன்னும் இவ்­வா­றான பல­வி­ட­யங்­களை சொல்­லலாம். ஆனால் ஒரு விட­யத்தை மட்டும் தெளி­வாக அறிந்து கொள்­ளுங்கள். குப்­பைக்குள் போனாலும் குண்­டு­மணி குண்­டு­ம­ணிதான்.ிடயத்தை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டுமணிதான். மக்கள் வீசியது குண்டுமணியை நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையை. தயவு செய்து நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசாதீர்கள். மக்கள் சிரிப்பார்கள். உங்களில் காணமுடியாத பல பெரும் குணங்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காண்கிறேன். இது தவறானதா? மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களே தவிர தலைவராக தெரிவு செய்யவில்லை. நீங்கள் கூறுவதுபோல கட்சியும் மக்களுமே அதனை தீர்மானிப்பார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19