பெண்களின் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க விஷேட செயலணி - சஜித் பிரேமதாச

13 Jul, 2020 | 09:01 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் பெண்களின் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தனது தலைமையில் செயலணி ஒன்றை அமைப்பதாக தெரிவித்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச , பெண்களின் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதாகவும் கூறினார்.

இதேவேளை போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு தனது ஆட்சியில் மரணத்தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர் , இந்த தீர்மானம் பாரதூரமானது என்றாலும் , போதைப் பொருள் கடத்தலினால் பாதிக்கப்படும் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் இருப்பதினால் இதனை செயற்படுத்துவதை தவிர வேறுவழியில்லை என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 'மேன்மைமிகு பெண்மை' வளையத்தலம் தாமரைத்தடாகத்தில் இன்று  திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

எமது ஆட்சியின் போது பெண்களின் அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதுடன் , பிரதமர் தலைமையில் செயலணி அமைத்து பெண்களின் தேவைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்போம். இதன்போது சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலன்புரி , பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்தி, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.

பெண்களின் தலைமையிலான குடும்பங்களின் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுப்பதுடன் , நுன்கடன் திட்டம் காரணமாக பாதிப்படைந்துள்ள பெண்களை மீட்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். பாராளுமன்றத்தில் பெண்கள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதுடன் , பெண்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.

போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். ஒருவரது உயிரை பறிப்பது தவறான செயற்பாடு என்றாலும். போதைப் பொருள் கடத்தலினால் எமது இளைய தலைமுறை மற்றும் பாடசாலை மாணவர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நாம் யாதார்த்தத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியான நிலைமையிலிருந்து எமது எதிர்கால தலைமுறையினரை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த சட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36