கொழும்பில் இரண்டு  பிரதிநிதிகளுக்காக ஆணை கோருகின்றோம் - ஐ.ம.ச. வேட்பாளர் வி.ஜனகன் செவ்வி

13 Jul, 2020 | 05:55 PM
image

(நேர்கணால்:- ஆர்.ராம்)

தற்போதையசூழலில் கொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்தவப்படுத்தி இரண்டு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்காக மக்கள் ஆணையை கோரிநிற்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் வீரகேசரிக்கு வழங்கியசெவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:-ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தேர்தல் அரசியலுக்குள் பிரவேசித்த நீங்கள் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டமைக்கான காரணம் என்ன?

பதில்:- 2015ஆம் ஆண்டு வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்தேன். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தினை அடுத்து எனது மக்கள் சேவையினை முன்னெடுத்துக்கொண்டிருந்தபோது, ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் செயற்படுவதற்கான வீச்சினை முன்னெடுத்திருந்தது. 

அச்சமயத்தில் மனோகணேசன் தலைமையிலான அவ்வணியுடன் நானும்  இணைந்து வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரந்துபட்ட  செயற்பாடுகளில பங்கேற்றிருந்தேன். 

கேள்வி:-வடக்கு அல்லது கிழக்கு பிரதேசத்திலேயே நீங்கள் களமிறங்கப்போவதாக கூறப்பட்ட நிலையில் கொழும்பை மையப்படுத்தி முடிவு எடுக்கப்பட்டமைக்கு விசேட காரணங்கள் உண்டா?

பதில்:- வடக்கு கிழக்கு தேர்தல் களத்தினைப் பார்த்தீர்கள் என்றால் அங்கு தமிழ் தேசியப் பரப்பிலேயே போட்டிகள் அதிகமாக உள்ளன. ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கு ஒரு பல்முனைத் தேர்தல் களமாகியுள்ளது. அங்கு தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுவதானது தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கும், பிரதிநிதித்துவத்தினையும் பாதிக்கும் என்பதை நன்குணர்ந்து எமது கட்சியின் தலைவர் மனோகணேசன் வடகிழக்கில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்தார். இந்த தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்கை ரீதியாக எடுக்கப்பட்டதொன்றாகும். 

அடுத்ததாக சமகால அரசியல் சூழமைவுகளுக்கு அமைவாக பார்க்கின்றபோது கொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கான அடையாளத்தினை வழங்குவதற்குரிய பிரதிநிதிகளின் தேவைப்பாடு அதிகமாகவே உள்ளது. ஆகவே இவ்விரண்டு விடயங்களையும் கருத்திற்கொண்டே கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவதென்று தீர்மானித்தேன்.

கேள்வி:- கொழும்புத் தேர்தல்களத்தில் முதன்முதலாக அறிமுகமாகியிருக்கும் உங்களுக்கு எவ்விதமான சவால்கள் இருப்பதாக உணர்கின்றீர்கள்?

பதில்:- கல்வித்துறை, நிர்வாகத்துறை, சட்டத்துறை என்று மக்களுடன் பின்னிப்பிணைந்த விடயப்பரப்புக்களில் 18வருடங்களாக செயற்பட்டு வரும் அனுபவம் எனக்கு காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் மக்களுடன் மக்களாக பழகியதால் அவர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ளேன். ஆகவே அந்த மக்கள் எனக்கு அளிக்கும் வாக்குகள் என்னை வெற்றிபெறவைப்பவையாக அமைகின்றபோது அவர்களின் ஒருவனாக அவர்களின் குரலாக நேர்மையாக இருப்பேன். 

மேலும் இம்முறை கொழும்பு மாவட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும் என்ற ஒரேநோக்கத்தினை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டிருக்கின்றது. பொதுஜன பெரமுன தமிழ் வேட்பாளர்களையே போட்டியிட அனுமதிக்கவில்லை. ஐ.தே.க தமிழ்பேசும் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காக முகவர்கள் ஒருசிலரை களமிறக்கியுள்ளது. எனவே கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்கள் இச்சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும். 

கேள்வி:- இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளைப் பெறுவது நடைமுறைச்சாத்தியமானதொன்றாகுமா?

பதில்:- ஆம், கொழும்பில் தேசிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டிகள் காணப்படுகின்றன. 922வேட்பாளர்களில் 850இற்கும் மேற்பட்டவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்கள். அதேநேரம் கொழும்பில் ஒன்றரை இலட்சம் தமிழ் வாக்காளர்கள் உள்ளார்கள். மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் வாக்காளர்கள் உள்ளார்கள். ஏற்கனவே எமது அணியில் பத்து மாநாகர சபை உறுப்பினர்களை இந்த மக்களே தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே அவர்கள் நிச்சயமாக தமக்காக இரண்டு பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள். அதற்கான காலச்சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளது. 

கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்:- தமிழ், முஸ்லிம், சிங்கள தலைவர்களை உருவாக்ககூடிய சக்தியாகவே ஐக்கிய மக்கள் சக்தியை அடையாளம் காணுகின்றேன். பல்லினத்தினைக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் பொதுஜன பெரமுனவினர் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை மட்டுமே மையப்படுத்தி அரசியலில் ஈடுபடுகின்றனர். 

ஐக்கிய தேசியக் கட்சியானது,  தமிழ் மக்களின் வாக்குகளை எவ்வாறாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முனைப்புக்காட்டுகின்ற போதும் தமிழர் பிரதிநிதித்துவங்கள் தெரிவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக செயற்படுகின்றார்கள். 

அவ்வாறிருக்கையில், சஜித் பிரேமதாஸ தரப்பினைப் பொறுத்தவரையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக, பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் நேர்மையாக செயற்படுகின்றார். ஆகவே அவ்வாறானதொரு தலைவரின் கீழான கூட்டணியை ஆதரிப்பதில் எந்தவிதமான தவறுமில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். 

கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தியானது பொதுஜனபெரமுனவின் நகலாக உருவெடுக்கின்றது என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றதே?

பதில்:- இலங்கையின் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சிங்கள, பௌத்த மக்களையே தமது வாக்காளர்களை கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் அத்தரப்பினரை மையப்படுத்தியே செயற்படுவார்கள் என்பது யதார்த்தமானதொரு விடயம். 

அவ்வாறிருக்கின்ற நிலையில் இருக்கின்ற தேசிய கட்சிகளில் இன, மதவாதத்தின் வீச்சு நிலை எந்த தரப்பிடம் குறைவாக இருக்கின்றது என்ற அடிப்டையில் தான் நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. 

பொதுஜனபெரமுனவாக இருக்கலாம், ஐக்கிய தேசியக்கட்சியாக சிங்கள, பௌத்த வாத்தினையே முழுக்க முழுக்க மையப்படுத்திச் செயற்படுகின்றன. அவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியிடத்தில் அவ்விதமான போக்குகள் இல்லை. 

இந்தக் கூட்டணியிலேயே தான் தமிழ், முஸ்லிம் தரப்பினைச் சார்ந்த அதிகளவான கட்சிகள் பங்காளிகளாக இருக்கின்றன. கூட்டணியில் இருக்கும் ஒருசிலரால் ஒட்டுமொத்த கூட்டணியும் அந்த நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றது என்று கூறிவிட முடியாது. 

கேள்வி:- கொழும்பு மாவட்ட மக்களை மையப்படுத்தி நீங்கள் கொண்டிருக்கும் திட்டங்கள் என்னவாக இருக்கின்றன?

பதில்:- தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் என்று பேசப்படுகின்றபோது வடக்கு கிழக்கு மலையக மக்களை மையப்படுத்தியதாகவே கருத்தாடல்களும்  கவனமும் இருக்கின்றது. ஆனால் கொழும்பிலும் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன என்பது பேசுபொருளாவதில்லை. 

கொழும்புவாழ் தமிழ் மக்களின் அபிலாஷைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் அடையாளமாக எமது பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்பதே முதலாவது விடயமாகின்றது. 

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நாளாந்த வருமானத்தினை பெறும் குடும்பங்கள் அதிகமாக உள்ளன. நிரந்தர குடியிருப்புக்களின்றிய நிலை, கல்வி, சுகாதாரத்தில் பின்னடைவு என்று பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவற்றை முறையாக அடையாளப்படுத்தி செயற்றிட்டமொன்றை வகுத்து படிப்படியாக அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதே எமது திட்டமாகவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22