"பி.சி.ஆர். சோதனைகளை அதிகரிக்காவிட்டால் வைரஸின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது"

Published By: Vishnu

13 Jul, 2020 | 11:06 AM
image

நாட்டில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதாரத்துறையினரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றமையினை மேற்கொள் காட்டியே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் நாளாந்தம் 2,500 பி.சி.ஆர். சோதனைகளை பரிந்துரைத்தபோதிலும், கடந்த இரண்டு மாதங்களாக நாளொன்றுக்கு 500-1600 பி.சி.ஆர். சோதனைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வைரஸ் பரவுவதை முறையாகக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் மேலும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5,000 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் வைரஸின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19