வெவ்வேறு பிரதேசங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் - அனில் ஜாசிங்க எச்சரிக்கை

12 Jul, 2020 | 11:12 PM
image

(எம்.மனோசித்ரா)

வெவ்வேறு பிரதேசங்களில் நோயாளர்களை இனங்காண்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும் நோக்கிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் மக்களும் வெவ்வேறு குழுக்களும் இந்த நிலைமையை உதாசீனப்படுத்தும் நிலைமையே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரை கொரோனா தொற்றுக்குள்ளான 103 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இனங்காணப்பட்ட 103 நோயாளர்களில் 76 பேர் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வருபவர்களாவர். 

14 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை அண்மித்தவர்கள் என்பதோடு நால்வர் ராஜங்கனையில் இனங்காணப்பட்ட நோயாளருடன் தொடர்பினைப் பேணியவர்களாவர்.

அத்துடன்  பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 2பேரும்,  பெலாரஸிலிருந்து நாடு திரும்பிய 5 பேரும்,  ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் பேரும் அடங்குகின்றனர்.

இன்றை தினம் இனங்காணப்பட்ட நோயாளர்களில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்தவர்களை தவிந்த ஏனையவர்கள் கந்தக்காட்டில் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

அதற்கமைய இது வரையில் நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2614 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1981 பேர் குணமடைந்துள்ளதோடு 622 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கந்தக்காட்டில் நோயாளர்கள் இனங்காணப்பட்டமையை அடுத்து சுமார் 300 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலைவரம் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெளிவுபடுத்துகைலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஓரளவு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனார் அதனார் பாரதூரமான விளைவுகள் ஏற்படாது. எனினும் இராஜாங்கனையில் இனங்காணப்பட்ட நபர் வெளியிடங்களுக்குச் சென்றுள்ளார். அவரது மனைவி மற்றும் மகளும் வெளியிடங்களுக்குச் சென்றுள்ளமையே தற்போது பிரச்சினையாகும்.

இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சனிக்கிழமை சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள தொழிநுட்ப குழு கூடியது.

இதில் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிகக் கூடும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான பலம் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புதுறையினரிடம் காணப்படுகின்றது. இவர்களால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் வௌ;வேறு பிரதேசங்களில் நோயாளர்களை இனங்காணபதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும் நோக்கிலேயே நாடு முழுமையாக திறக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் மக்களும் வௌ;வேறு குழுக்களும் இந்த நிலைமையை உதாசீனப்படுத்தும் நிலைமையே காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் எம் ஒவ்வொருவருக்கும் தொற்றாமல் இருப்பதற்கான செயற்பாடுகளை முழுமையாக மீறியே இவர்களனைவரும் செயற்படுபடுகின்றனர் என்பது குறிப்பிட்டு கூற வேண்டிய விடயமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51