சிவில் செயற்பாடுகளில் இராணுவம் நுழைந்துள்ளதால் ஜனநாயகம் அச்சுறுத்தலில் - அனுரகுமார திசாநாயக்க

12 Jul, 2020 | 10:55 PM
image

(ஆர்.யசி)

நாட்டின் பிரதான சிவில் செயற்பாடுகளில் இராணுவம் நுழைந்துள்ளது. இராணுவத்தை பயன்படுத்தி ஆட்சியை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நினைப்பது  நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தும்.

அதேபோல் இந்தியா, சீனா, அமெரிக்க தூதரகங்களே இன்று இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஜனாதிபதி  கோதாபய ராஜபக் ஷவின் அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான அரசியல் பாதையில் பயணிக்க நினைத்தால் அது ஜனநாயகத்திற்கு ஏற்படும் அழிவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவலை அடுத்து தேர்தல் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட  வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த ஆட்சியாளர்களை வீழ்த்தி ஆரோக்கியமான அரசியல் சூழல் ஒன்றினை உருவாக்கிக்கொள்ளவே நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். மக்களிடமும் நாம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், இப்போது வரையில் மக்களை ஏமாற்றி நாட்டினை நாசமாக்கி வருகின்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து அனைவரும் வாழக்கூடிய அரசியல், சமூக சூழல் ஒன்றினை உருவாக்க தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.

இந்த அரசாங்கம் கொவிட் வைரஸ் காரணியில் தம்மை வீரர்கள் போன்று காட்டிக்கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் கொவிட் வைரஸ் பரவலின் பின்னர் நாட்டில் நடுத்தர மற்றும் கஷ்டப்படும் நாளாந்த கூலிவேலை செய்யும் சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேயில்லை. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எமது சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் மிகப்பெரிய சேவையினை செய்துள்ளனர். ஆனால் அதனை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாது.

ஆனால் ராஜபக் ஷக்கள் எப்போதும் போல் இராணுவத்தின் வெற்றியை தமது வெற்றியாக கூறும் நபர்கள். அதுபோன்ற ஒன்றே இப்போதும் இடம்பெற்றுள்ளது. நோய் தடுப்பை கையாள்வதில் வெற்றிபெற்றுள்ள போதிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது போயுள்ளது. நாளாந்த வேலைசெய்யும் நபர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி:-கொவிட் -19 வைராஸ் பரவலின் பின்னர்  உலகில் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதே, இலங்கைக்கு மாத்திரம் எவ்வாறு இது விதிவிலக்காக அமையும்?

பதில் :- உலகில் பல நாடுகள் தமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். உற்பத்தியை துரிதமாக முன்னெடுக்க பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தாக்கத்தில் எதற்கு முன்னுரிமை வழங்க  வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்காது தமது அமைச்சுக்களுக்கான வாகனங்களை பெற்றுக்கொள்ளவும், வீதிகளை புனரமைக்கவும் நிதிகளை ஒதுக்கிக்கொண்டுள்ளனர். இப்போதுள்ள நிலையில் இந்த அபிவிருத்திகளை விடவும் மக்களின் வாழ்வாதாரம் மிக முக்கியமானதாகும்.

கேள்வி :- ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் அரசாங்கம்  இராணுவ மயமாவதாக கூறும் குற்றச்சாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :- இராணுவ ஆட்சி என்பது ஆட்சியை இராணுவம் கையில் எடுத்து அவர்களே அனைத்தையும் இயக்குவது. அதேபோல் அரசாங்கதின்வேலைத்திட்டங்களில் இராணுவத்தை பயன்படுத்துவது என்பது வேறு விதமான ஆதிக்கமாகும். இரண்டாவது ஆட்சி முறைமையே இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் இராணுவத்தை பயன்படுத்தி ஆட்சியை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நினைப்பாராயின் அதற்கு இடமளிக்க முடியாது.

இப்போதும் நாட்டின் பிரதான சிவில் செயற்பாடுகளில் இராணுவம் நுழைந்துள்ளது. இது ஜனநாயகத்தை கேள்விக்கு உற்படுத்தும். ஜனாதிபதி  கோதாபய ராஜபக் ஷவின் அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தை பிரதானப்படுத்திய பாதையில் பயணிக்க நினைத்தால் அது ஜனநாயகத்திற்கு ஏற்படும் அழிவாகும், அதற்கான அச்சுறுத்தல் உள்ளது. ஆனால்  இந்த நாட்டின் மக்கள் எப்போதும் இராணுவ ஆட்சியை ஏற்றுகொள்ள விரும்பாத நபர்கள். அவர்கள் இராணுவ ஆட்சிக்கு இடமளிக்க மாட்டார்கள்.

கேள்வி:- இந்த நாட்டின் ஆட்சியை வெளிநாட்டு இராஜதந்திரிகள் தீர்மானிப்பதாக நீங்கள் குற்றம் சுமத்தியதன் நோக்கம் என்ன?

பதில்:- மக்கள் வாக்குகளின் மூலமாக அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும் கூட அரசாங்கத்தை இயக்குவது இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தூதரகங்கள் மூலமாக என்பது தெளிவாக தெரிகின்றது. தலைவர்களை கூட தூதரகங்கள் மூலமாகவே தீர்மானிக்கப்படுகின்றது.

மக்கள் நிராகரிக்கும் விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்றால் அதற்கு பிரதான காரணம் தூதரகங்களேயாகும். மக்கள் எம்.சி.சியை நிராகரித்தாலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எம்.சி.சி உடன்படிக்கைக்கு ஆதரவானவர். அமெரிக்காவை திருப்திப்படுத்த அவர் அதனை செய்வார்.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள மக்கள் விரும்பினாலும் அதனை இந்தியாவிற்கு வழங்கவே ஜனாதிபதி நினைக்கின்றார். இவ்வாறு ஒவ்வொரு தூதரகங்களை நம்பி ஆட்சி செய்கின்றனர்.

இந்தியாவும் சீனாவும் இலங்கையை துண்டாடி வருகின்றது. வடக்கு கிழக்கு இந்தியாவிற்கு, தெற்கு மற்றும் மேற்கு அபிவிருத்தி சீனாவிடம் உள்ளது. இவ்வாறு இலங்கையின் வளங்களை போட்டிபோட்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்கிவிட்டனர். இப்போது எமது வளங்களை நாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் வேளையில் இரண்டு நாடுகளும் இலங்கை மக்களுடன் முரண்பட்டு செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13