அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் சுகாதார, பாதுகாப்பு அதிகாரிகளின் முயற்சிகளை வீணடிக்கிறது - கரு கவலை

12 Jul, 2020 | 10:28 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனை பின்பற்றாமல் கடந்த சில வாரங்களாக அரசியல்வாதிகளால் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அரசியல்வாதிகளின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளானது கடந்த சில மாதங்களாக நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனா அச்சுறுத்திலிருந்து காப்பாற்ற தமது உயிரைப் பணயம் வைத்துள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் முயற்சிகளை வீணடிப்பதோடு, அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்கு உச்சகட்ட அவமதிப்பை ஏற்படுத்துவதைப் போன்றாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் பற்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

இது வரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலானது தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத்துறையின் விஷேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறானதொரு நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் பொதுத் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதனை இன்னும் வர்த்தமானிப்படுத்தாமை கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பபடாமையின் காரணமாக பிரசாரக் கூட்டங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் உரிய அதிகாரிகளுக்கு இல்லாமலிருக்கின்றது.

சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கின்றார். எனினும் சட்ட ரீதியான நடவக்கைகள் எடுப்பதற்கான அதிகாரம் இன்றி இவ்வாறு கோரிக்கை விடுப்பதானது அரசியல் பிரசாரம் போன்ற மிகவும் போட்டி நிறைந்த சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாது கடந்த வாரங்களில் பல அரசியல்வாதிகள் பிரசார கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

அரசியல்வாதிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனா அச்சுறுத்திலிருந்து காப்பாற்ற தம து உயிரைப் பணயம் வைத்துள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் முயற்சிகளை வீணடிக்கின்றது. இது அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்கு ஏற்படுத்தப்படும் உச்சகட்ட அவமதிப்பாகும்.

எனவே இந்த கவலைக்கிடமான சூழலில் மக்கள் தம்மை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். அத்தோடு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த வழிகாட்டல் ஆலோசனைகளுக்கு சட்ட ரீதியான மதிப்பை வழங்கி நாட்டு மக்களை கொரோனா வைரசிடமிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொறுப்புள்ள அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொள்கின்றேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02