மட்டக்களப்பில் வீடுபுகுந்து நகை, பணம் கொள்ளை 

Published By: Priyatharshan

05 Jul, 2016 | 05:11 PM
image

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் நகர் போக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது தன்வசமிருந்த சுமார் 2 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகளும் ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தமீம் தௌபீக்கா (வயது 32) தெரிவித்தார்.

இச்சம்பவம்பற்றி அவர் மேலும் கூறியதாவது, 

திங்கட்கிழமை நள்ளிரவு ரமழான் நோன்புக்கால வணக்கவழிபாடுகளை முடித்து விட்டு வீட்டார் அனைவரும் நடுநிசியைத் தாண்டி அதிகாலை ஒரு மணியளவில் நித்திரைக்குச் சென்று விட்டோம்.

வழமைபோன்று நோன்பு அனுஷ்டிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது இரண்டு அலுமாரிகள் திறந்து காணப்பட்டதோடு அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடுதுணிகள் உட்பட பொருட்கள் யாவும் சிதறிக் கிடந்தன. 

கைப்பைகள் வாசலுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் போடப்பட்டிருந்தன. 

இதன்போது அலுமாரிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார்  இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய நகைகளும் ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டிருந்ததை அறியமுடிகின்றது” என்றார்.

“திருடர்கள் வீட்டுக்குள்ளேயே நீண்ட நேரம் இருந்து பொருட்களை ஒவ்வொன்றாக பரிசோதித்து தங்க நகைகளை திருடியுள்ளனர். 

இதன்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எமக்கு ஏதாவது மயக்க மருந்து தெளித்திருந்தார்களா என்பது பற்றிய ஐயம் இருப்பதாகவும்” தௌபீக்கா குறிப்பிட்டார்.

திருடர்கள் மதிலால் பாய்ந்து வந்து வீட்டுக்கதவுளைத் திறந்து நன்கு பரிசோதித்து திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த வீதியின் மறுபக்கத்திலுள்ள வீடொன்றிலிருந்த அலவாங்கு ஒன்றையும் எடுத்து வந்து வீட்டுக் கதவுகளைத் திறக்க திருடர்கள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸாரும் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58