வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 29 பேர் விடுவிப்பு

Published By: Digital Desk 4

12 Jul, 2020 | 07:12 PM
image

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா  பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 29 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்.  

கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது .     

அந்த வகையில் கடந்தமாதம்  யூன் 26ஆம் திகதி பங்களாதேஷ்  நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர்  வவுனியா  பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.   

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்,

 29 பேர் அவர்களது சொந்த இடங்களான கொழும்பு மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களிற்கு பஸ்கள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32