மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மீண்டும் மரணதண்டனை வழங்கி பாணந்துறை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் சார்பில் பாணந்துறை உயர் நீதிமன்றத்தில் மேன்மறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்றது.

குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு இன்று (05)  அறிவிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹொரண பகுதியில் வசித்து வந்த சாலிய சகத் ஜயவீர என்ற நபரை 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி வெட்டி கொலை செய்த காரணத்திற்காகவே குறித்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.