பாடசாலை, கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Published By: Digital Desk 4

12 Jul, 2020 | 04:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமை மேலும் உக்கிரமடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள் , அறநெறி பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது.

அத்தோடு கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளினதும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக கல்வி பணிப்பாளர் தலைமையில் கல்வி அமைச்சில் தகவல் மத்திய நிலையமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது :

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வி கட்டமைப்பிற்குள் உள்ளடங்கும் மாணவர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து கல்வித்துறை சார் அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு மிகுந்த அவதானம் செலுத்தியிருக்கிறது.

இதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சில் மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு அதிகாரிகளை உள்ளடக்கிய தகவல் மத்தியநிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மத்திய நிலையம் கல்வி பணிப்பாளரின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த மத்திய நிலையத்தை 1988 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமும் 011-2785818 என்ற பெக்ஸ் இலக்கத்தினூடாகவும் info@moe.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக் கூடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

மேற்குறிப்பிடப்பட்ட இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் அதிபர்கள் , கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தாம் பணிபுரியும் இடம் மற்றும் பிரதேசத்தில் கொவிட் - 19 தொடர்பில் தகவல்களை வழங்க முடியும். இந்த தகவல் மத்திய நிலையத்தின் ஊடாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாகாண வலயங்கள் மற்றும் தொகுதிக்குள் வைரஸ் பரவல் நிலைமை தொடர்பில் பாடசாலைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதோடு அந்த தகவல்கள் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கல்வி அமைச்சு தொடர்ச்சியாக கல்வித்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவரதும் சுகாதார பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மேலும் தீவிரமடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள் , அறநெறி பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு மீண்டு;ம் விடுமுறை வழங்கி அனைவரதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04