வெளிநாட்டு மாணவர்களை விரட்டியடித்தல் : டொனல்ட் ட்ரம்பின் புதியவியூகம்

12 Jul, 2020 | 03:09 PM
image

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை

விநாசகாலே விபரீதபுத்தி என்பார்கள். ஒருவருக்கு கெட்டகாலம் வரும்போது, மனதுதடுமாறுவார். துவறான முடிவை எடுப்பார். அவரதுஅழிவைத் தானேதேடிக் கொள்வார் என்பதுபொருள்.

இது டொனல்ட் ட்ரம்பிற்குப் பொருந்துவதைப் போல வேறு எவருக்கும் பொருந்தாது எனத் தோன்றுகிறது. இதற்கு அமெரிக்காவின் இன்றைய நிலை மிகச்சிறந்த உதாரணம்.

Foreign students must leave US if their university goes online ...

இந்தமனிதரின் விதிகெட்டுப் போனதால், மதிகெட்டதீர்மானங்களை  எடுத்தார். இதனால், கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறது, அமெரிக்கா.

இனவாதத்தைத் தூண்டினார். பொலிஸ் அடக்குமுறைகளை மறைமுகமாக அங்கீகரித்தார். இன்று புதியதொரு கட்டளையைப் பிறப்பித்திருக்கிறார்.

இது பிறநாடுகளில் இருந்து உயர் கல்வியைத் தொடர்வதற்காக அமெரிக்கா சென்றவர்களுடன் தொடர்புடையது. அவர்களுக்கான அமெரிக்க விசாபற்றியது.

ஒருவெளிநாட்டுமாணவர் அமெரிக்கஉயர் கல்விநிறுவனத்தில் கல்விபயில்கிறார் என்றுவைத்துக் கொள்வோம்.

அந்தநிறுவனம் பாடநெறிகளை ஒன்லைன் முறைக்குமாற்றி இணைய வழிக்குமாற்றும் பட்சத்தில், வெளிநாட்டு மாணவரின் விசாவை ரத்துச் செய்வது ட்ரம்பின் திட்டம்.

ஒன்லைனில் மாத்திரம் நடத்தப்படும் பாடநெறிகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டுவெளியேற வேண்டும்.

அவ்வாறில்லாதபட்சத்தில், வகுப்பறைகளில் பாடம் நடத்தப்படும் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அதற்குமாறவேண்டும்.

அமெரிக்காவில் வதியாதவர்களுக்கான எவ்-1, எம்-1 ஆகியவிசாக்களைவைத்திருக்கும் மாணவர்களுக்கு புதியஉத்தரவு ஏற்புடையது.

இந்தத் திட்டம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்குத் தொடுத்துள்ளது. 

Harvard University & Massachusetts Institute Of Technology File A ...

திட்டத்தின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. பலவியாக்கியானங்கள் கூறப்படுகின்றன.

அமெரிக்காவில் பலநாடுகளைச் சேர்ந்தமாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்கிறார்கள். கடந்த ஆண்டு 11 இலட்சம் பேர் சேர்க்கப்பட்டார்கள்.

அங்குஉயர் கல்விநிறுவனங்களில் கல்விகற்கும் ஒட்டுமொத்தமாணவர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இது ஐந்து சதவீதமாகும்.

இந்தவெளிநாட்டு மாணவர்களால் அமெரிக்காவிற்கு பலவழிகளில் நன்மை. பொருளாதார நன்மை முக்கியமானது.

உயர் கல்விநிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்விகற்கும் வெளிநாட்டுமாணவர்கள் மூலம் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 41 பில்லியன் டொலர் வருமானம்.

இது தவிர,நான்கரை இலட்சத்திற்குமேலானதொழில் வாய்ப்புகள் உருவாவதாகநாவ்சாஎன்றஅமைப்புமதிப்பிட்டுள்ளது.

கல்வித்துறையைஎடுத்துக் கொண்டாலும்,உள்ளுர் மாணவர்களைவிடவும் வெளிநாட்டு மாணவர்கள் கூடுதலானபங்களிப்பை வழங்குகிறார்கள்.

சென்னையில் இருந்துசென்ற சுந்தர் பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசமாணவராக கல்வி கற்றவர் என்பதை நினைவு கூரலாம்.

தீராத காதல் .!! என்னை இந்த இடத்திற்கு ...

இன்று கூகிள் (அல்பபெட்) நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரியாக இருக்கிறார். அவரைப் போல இன்னும் பலரையும் உதாரணம் கூறலாம்.

அமெரிக்க உயர் கல்விநிறுவனங்களில் வெளிநாட்டுமாணவர்கள் கல்விகற்பது சமூகரீதியாகவும் அமெரிக்காவிற்கு நன்மைபயக்கும் விடயமாகும்.

இதன்மூலம், அமெரிக்காவின் எதிர்கால சந்ததிபோட்டித்தன்மை மிக்கதாக மாறுகிறது. பன்முகத்தன்மைவாய்ந்த சூழலில் வாழப் பழகிக் கொள்கிறது.

இதையெல்லாம் இழப்பதுபற்றி அமெரிக்க ஜனாதிபதிக்கு கவலையில்லை. எல்லாமே இயல்பாக இருக்கிறது என்றதோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில், எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. அதில் வெற்றி பெற்றாக வேண்டுமாயின், இயல்பு நிலைபற்றிய தோற்றப்பாடு முக்கியமானது.

வெளிநாட்டு மாணவர்களை விரட்டியடிக்கும் உத்தரவு, பூமராங் போன்று அமெரிக்க ஜனாதிபதியை திருப்பித் தாக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தமாணவர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை, ஒருமனிதாபிமான நெருக்கடியாக பரிணமித்து அமெரிக்கர்களின் மனங்களை அசையச் செய்திருப்பது இதற்குக் காரணம்.

சொந்தநாட்டைவிட்டு பல்லாயிரம் மைல் கடந்து,பெருந்தொகை பணத்தைசெலவழித்து அமெரிக்க உயர் கல்விக் கூடங்களில் கல்விகற்கும் மாணவர்கள்.

அமெரிக்காவில் தீவிரமாகபரவிவரும் கொரோனா-வைரஸ், அவர்களின் வாழ்க்கையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் சர்வதேசமாணவர்களுக்குகிடையாது. வேறுவருமான மார்க்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில்,உணவு,உறைவிடம் முதலானஅன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவர்கள் பெரும் சிரமப்படவேண்டிய சூழ்நிலைஎழுந்துள்ளது. 

கொவிட்-19 நெருக்கடிகாரணமாக, அங்குமிங்கும் செல்லமுடியாது. விமானரிக்கட்டுக்களை வாங்குவது சிரமம்.

தமதுதங்குமிடங்களுக்கானவாடகை செலுத்துவது மேலதிகசுமை. எல்லோரும் நாடுதிரும்பவும் முடியாது.

ஒரு இலட்சியத்துடன் வந்தவர்கள்,அடுத்து என்னசெய்வதெனத் தெரியாமல் தத்தளிக்கும் நிலை. பலருக்கு எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது.

இந்தவெளிநாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் அவலநிலையைநிவ்யோர்க் ரைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட் முதலானபத்திரிகைகள் பட்டியலிட்டுள்ளன.

இவர்களில் பலமாணவர்கள் சொந்தநாடுகளுக்குத் திரும்பமுடியாது. ஏனெனில் பலநாடுகளில் விமானப் பயணங்கள் வழமைக்குத் திரும்பவில்லை.

ஐரோப்பியஒன்றியநாடுகளைஎடுத்துக் கொள்ளலாம். இந்நாடுகள் அமெரிக்காவில் இருந்துவரும் பயணிகளுக்கு இன்னமும் அனுமதிஅளிக்கவில்லை.

உயர் கல்வியை இடைநடுவில் விட்டுநாடு திரும்பியமாணவர்கள் அனைவருக்கும் ஒன்லைன் முறையில் கல்வியைத் தொடரக்கூடிய வாய்ப்புகிடையாது.

New US visa rule leaves Indian, Chinese students in panic ...

நிவ்யோர்க் ரைம்ஸ் பத்திரிகை, இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்தமாணவி பற்றி எழுதியிருக்கிறது.

இந்தமாணவி, இந்தியாவில் கால்பதித்தசமயத்தில் சந்தோஷப்பட்டார். எனினும்,காஷ்மீர் சென்றபோதுஅவர் கவலைப்பட நேர்ந்தது.

இந்திய அரசாங்கம் விதித்தகட்டுப்பாடுகளால், காஷ்மீரில் அன்றாடத் தேவைகளுக்காக வெளிமாநிலங்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதே சிரமம்.

இந்தநிலையில்,காஷ்மீரில் இருந்து இணையத்தின் மூலம் அமெரிக்க உயர் கல்விநிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஒன்லைன் பாடங்களை நடத்துவது எவ்வாறு?

தனியாக அமெரிக்கா சென்றமாணவர்களின் கதைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிடுவோம். குடும்பமாக சென்றவர்களின் கதைகளும் துயரம் தருபவையே.

முது கலைமாணி, முது விஞ்ஞானமாணிகற்கை நெறிகளுக்காக மாணவர் விசாவில் அமெரிக்கா செல்பவர்கள் குடும்பத்தவர்களையும் அழைத்துக் கொள்வதுவழமை.

இத்தகையோர் கொவிட்-19 நெருக்கடிசமயத்தில் பிள்ளைக் குட்டிகளுடன் சிரமப்பட நேர்ந்துள்ளதை அமெரிக்கப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ட்ரினிடாட் என்ட் டுபாக்கோஎன்றகரீபியன் தீவைச் சேர்ந்தபெண்ணொருவரின் கதை முக்கியமானது. இவர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவரைமணம் முடித்துள்ளார்.

ட்ரம்பின் புதியஉத்தரவுகாரணமாக, அதிகபணம் செலவழித்து வேறொருஉயர் கல்விநிறுவனத்தை நாடவேண்டும். இல்லாவிட்டால், நாடுதிரும்பவேண்டும் என்றநிலை.

எனினும்,கொவிட்-19 முடக்கநிலைகாரணமாக இவரது நாட்டில் கட்டுப்பாடுகள். விமானங்களுக்கு அனுமதியில்லை.

கணவருடன் அல்ஜீரியா செல்லவும் முடியாது. அங்கும் அனுமதி இல்லை என்பதால், அமெரிக்காவில் பிறந்தகுழந்தையுடன் அல்லாட வேண்டியிருக்கிறது.

தேர்தலுக்காக பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கு அவசரப்படும் டொனல்ட் ட்ரம்ப், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

தமது உத்தரவின் மூலம் பத்து இலட்சம் பேர் வரைபாதிக்கப்படுவார்கள் என்றுதெரிந்தும் அவர் பரிகாரங்களை முன்மொழியவில்லை.

அன்று கறுப்பினத்தவர்களுக்கு எதிரானபொலிஸ் அடக்குமுறைகள் எவ்வாறு அமெரிக்காமுழுவதிலும் ஆர்ப்பாட்டங்களுக்கு வித்திட்டன என்பதை நினைவுகூர முடியும்.

அமெரிக்கசமூகத்தின் அடித்தளமட்டத்திலும் இனவாதத்திற்கு எதிரான உணர்வுபெரும் போராட்டமாக பரிணமித்து, டரம்பின் நிர்வாகத்திற்குசவால் விடுத்தது.

அதேபோன்று, அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியசுயநலத் திட்டம் இன்றுஅந்நாட்டின் கல்விப் புலத்தில் எதிர்ப்பியக்கத்தை உருவாக்கியுள்ளது.

இன்று இந்தஉத்தரவிற்குஎதிராகவிஞ்ஞானிகள் ஒன்றுகூடிகுரல் கொடுத்திருக்கிறார்கள். இதன் குரூரத்தைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன.

ஏற்கெனவே,லைசோல் அருந்திகொரோனா-வைரஸை ஒழிக்கலாம் முதலானகருத்துக்கள் மூலம் டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்கமக்களின் வெறுப்பைசம்பாதித்துள்ளார்.

வெளிநாட்டுமாணவர்களை விரட்டியடிக்கும் சுயநலம் அவர் மீதானவெறுப்பைமேன்மேலும் அதிகரிக்கும் என்பதில் எதுவிதசந்தேகமும் கிடையாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22