தவறுகளைத் திருத்தி அரசியலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவேன் - ரணில் உறுதி

12 Jul, 2020 | 08:22 AM
image

(இராஜதுரை ஹஷான்)

 

கொவிட் -19  வைரஸ் தாக்கம் தீவிரமடைந்தால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். இதனால் நாட்டில் தொழிலின்மை பிரச்சினை ஏற்படும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் உறுதியான கொள்கை  கிடையாது.  ஆளும் மற்றும் எதிர் தரப்பினரை உள்ளடக்கி முறையான கொள்கைகளை தற்போது  வகுக்க வேண்டும்.

இளம் தலைமுறையினர் அரசியலை வெறுப்பதற்கு அரசியல்வாதிகளே காரணம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  தியவன்னா ஆற்றில்  தள்ள வேண்டும் என்று   குறிப்பிடுகிறார்கள். 

225  உறுப்பினர்களை ஆற்றில் தள்ளினார்  ஆறும், சுற்று சூழலுமே பாதிக்கப்படும். ஆகவே தவறுகளை திருத்திக் கொண்டு அரசியலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க தயார் என  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற  , தலைமுறை  நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

இளம் தலைமுறையினர் அரசியலை வெறுப்பது அவர்களின் தவறல்ல   அரசியல்வாதிகளின் தவறு   எமது நாட்டின் அரசியல் செயற்பாடுகள் அந்த  நிலையினை ஏற்படுத்தியுள்ளது.  2018ம் ஆண்டு   52 நாள் அரசாங்கத்தின்  செயற்பாடுகள், பாராளுமன்றத்தில்  செயற்பட்ட விதம் ஆகியவை  இளைஞர்களின் வெறுப்பினை மேலும் தீவிரப்படுத்தியது.   225  பாராளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஆற்றில் தள்ள வேண்டும் என்று குறிப்பிட்டல். பாராளுமன்ற உறுப்பினர்களை ஆற்றில் தள்ளினால்   ஆறும், சுற்று சூழலுமே பாதிக்கப்படும்.

 தவறுகளை திருத்திக் கொண்டு அரசியலில் ஒன்றினைய    இளைஞர்கள்  ஒத்துழைப்பு வழங்க   வேண்டும். இதன் காரணமாகவே   ஐக்கிய தெசிய கட்சியில் இம்முறை   புதிய  இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த   காலத்தில் வழங்கிய  வாக்குறுதிகளை முடிந்தவரையில்   நிறைவேற்றினோம்.   பல விடயங்களை     வெற்றிக்கொள்ள முடியாமல் போனது அதற்கு அரசியல் ரீதியான காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

 கொவிட்-  19 வைரஸ்  தாக்கம் மற்றும்  வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதரம் ஆகியவற்றை     எதிர்க் கொள்ள அரசாங்கத்திடம் முறையான  கொள்கை  திட்டங்கள்  கிடையாது..     கொவிட்    தாக்கம் இரண்டாம் சுற்றாக மாற்றமடைந்தால் நாட்டில் வேலையில்லா  பிரச்சினை தோற்றம் பெறும், அத்துடன் தேசிய பொருளாதாரமும் மேலும்  வீழ்ச்சியடையும்.

தற்போதைய  நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக்  கொள்ள  வேண்டுமாயின் பொருளாதாரத்தை வலுப்படுத்த  பலமான கொள்கைத்திட்டம் வகுக்க வேண்டும். அரசியல் காரணிகளை  விடுத்து  ஆளும் மற்றும் எதிர் தரப்பினர்  மற்றும் ஜனாதிபதி  ஆகியோர் ஒன்றினைந்து  ஒருமித்த கொள்கை  திட்டத்தை வகுக்க வேண்டும். கொவிட்-  19  வைரஸ் தாக்கத்தினால்  எம்மை விட பாதிக்கப்ட்ட   நாடுகள் பொருளாதார   மட்டத்தை கட்டுப்பாட்டுக்குள்  வைத்துள்ளன.  அந்நாடுகளில் நெருக்கடி நிலையில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.

பொருளாதாரம்,  கொவி;ட்-19 வைரஸ்  தாக்கம் ஆகிய சவால்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் முறையான அரசாங்கம் தோற்றம் பெற  வேண்டும். புதிய கொள்கைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு  இளைஞர் யுவதிகள் அரசியலில்    பங்குப்பற்ற வேண்டும் ஐக்கிய  தேசிய கட்சி   புதிய தலைமுறையினருக்கு  அரசியலில் முழுமையான   சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதனை முறையாக பயன்படுத்திக் கொள்வது இளைஞர்களின் பொறுப்பு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44