இலங்கை கடற்படை வகுத்துள்ள சிறப்புத் திட்டங்கள்

12 Jul, 2020 | 08:08 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வடக்கு, வட மேல் கடற்பரப்பு ஊடாக இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சிறப்புத்திட்டங்களை கடற்படை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, வடக்கு கடற்பரப்பு ஊடாக நாட்டுக்குள் போதைப் பொருள், ஆட்கடத்தல், தங்கம் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்க வடக்கு கடலோரத்தை மையப்படுத்தி விஷேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார கேசரிக்கு  கூறினார்.

குறிப்பாக தர்போதைய கொரோனாவுடன் கூடிய சூழலில்,  சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் ஊடாக நாட்டுக்குள் குறிப்பாக வடக்கில்  கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளமையை கருத்தில் கொண்டு அது தொடர்பில்  அறிவுறுத்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

'வடக்கு  கடல் மார்க்கத்தில் இடம்பெறும் குற்றங்களான போதைப் பொருள் கடத்தல், மனிதக் கடத்தல்,  பீடி இலை கடத்தல், தங்கக் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளுடன் மீனவர்கள் தொடர்புபடுகின்றமை, இதுவரை கைப்பற்றப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. 

 எனவே, மீனவர்களில் சிலர் எமக்கு  ஏற்கனவே இவ்வாறான கடத்தல் குறித்த தகவல்களை தரும் நிலையில், மீனவ சமூகத்தில் இருந்து இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கலைப் பெற்றுக்கொள்ள விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டு, வடக்கில் தற்போது அது அமுல் செய்யப்பட்டு வருகின்றது.' என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44