டொனால்ட் ட்ரம்பின் குடிவரவுக் கொள்கை ; ஒரு விசா அரசியல்

11 Jul, 2020 | 10:58 PM
image

அமெரிக்க விசா விதிமுறைகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் பொருளாதாரத்துக்கு நன்மையைவிடவும் கூடுதலான பாதிப்பையே ஏற்படுத்தக்கூடும்.

கொவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் சர்ச்சைக்குரிய குடிவரவுக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கின்றதுபோல் தெரிகிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு அல்லது 2020அரையாண்டு தவணைக்காக அந்தப் பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படுகின்ற இணையவழி மூலமான கற்கை நெறிகளை தொடர்கின்ற மாணவர்களுக்;கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கின்றது. அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அந்த இணையவழிமூலமான கற்கை நெறிகளுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டு தற்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கேட்க வேண்டும் அல்லது நேரடியாக கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் இணைந்துகொள்ளுமாறு கேட்க வேண்டும் என்று அமெரிக்க சமஷ்டி குடிவரவு மற்றும் சுங்க திணைக்களத்துக்கு ஆலோசனை கூறப்படுகின்றது. அந்த மாணவர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருப்பது சட்டப்பூர்வமானதாக மாற வேண்டுமானால், இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இல்லையானால், நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை அல்லது அதேபோன்ற குடிவரவு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்று அந்த திணைக்களம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அமெரிக்கா பூராகவும் கல்வித் துறைக்குள் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதை தெளிவாக உணரக்கூடியதாக இருக்கிறது. குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்புரையை தடுத்து நிறுத்துவதற்கு ஹாவார்ட் பல்கலைக்கழகமும் மாசாசூசெஸ்டஸ் தொழில்நுட்ப நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருக்கின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் தற்போதைய குடிவரவுக் கொள்கைக்கு எதிரான ஒரு பிந்திய திருப்பமாக இது அமைந்திருக்கிறது.

தேர்ச்சிபெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசாக்களையும் (எச்-1பி விசா பெற்றவர்களும் அவர்களில் தங்கியிருப்பவர்களும்) கம்பனிகளுக்கிடையே ஊழியர்களை இடமாற்றுவதற்கு அனுமதிக்கும் விசாக்களையும் (எல்-1) வழங்குவதை ட்ரம்ப் நிர்வாகம் நிறுத்தியிருக்கிறது. இது மாத்திரமல்ல, இந்த வருடத்தின் இறுதிவரை ஏனைய பல விசா வகைகளையும் பச்சை அட்டை பரிசீலனையையும் வாஷிங்டன் நிறுத்தியிருக்கிறது.

குடிவரவு கொள்கை தொடர்பான ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் பல கேள்விகளை கிளப்பியிருக்கின்ற அதேவேளை, அவற்றுக்கு பதிலளிக்கப்படுவதாக இல்லை. முதலாவதாக, கொவிட் 19 தொற்றுநோயின் விளைவாக படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு வெளிநாட்டு தொழிலாளர்களினால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டியது முக்கியமானதாக இருக்கின்றது என்ற வாதம் முன்வைக்கப்படுகின்ற அதேவேளை, வெளிநாட்டு மாணவர்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய தற்போதைய விசா நடைமுறையை நியாயப்படுத்துவதற்கு கூறப்படக்கூடிய காரணம் என்ன? இந்த மாணவர்கள் சகலரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு திறமையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவர்கள். அவர்கள் எவராலுமே அமெரிக்கர்களின் தொழில் வாய்ப்புகளுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் இல்லை.

இரண்டாவதாக, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளிலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் நிரம்பி வழிகின்ற அளவுக்கு அமெரிக்க சந்தையின் கிராக்கி இருப்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இலட்சக்கணக்கான இந்தியர்களினாலும் சீனர்களினாலும் வேறு வெளிநாடுகளின் தொழிலாளர்களினாலும்; செயல்திறனுடன் கையாளப்படுகின்ற தொழில்களை உள்நாட்டு தொழிலாளர்களினால் கையாளக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு போதுமான தொழில் ஆற்றல் இருக்கின்றது என்று இப்போது எவ்வாறு வாதிட முடியும்?

தொழில்நுட்ப அறிவுடனும் உயர்நிலை கல்வி கலாசாரத்துடனும் அமெரிக்கர்களுக்கு போதிப்பதற்காக உயர்கல்வி மற்றும் துறைசார் கல்வி முறைமைகளை பெறுமளவுக்கு மாற்றியமைக்க ட்ரம்ப் திட்டமிடாத பட்சத்தில் பெறுமதியான முறையில் அந்த தொழில்களை கையாளும் வல்லமை கொண்ட வெளிநாட்டவர்களை அமெரிக்க பொருளாதாரத்தின் பல துறைகளிலிருந்தும் விலக்கி வைப்பது பயனற்றதாகப் போகலாம். தற்போதைய குடிவரவுக் கொள்கை நடவடிக்கைகளின் மூலம் அரசியல் சமிக்ஞை ஒன்றின் ஊடாக தனது தேர்தல் பிரசாரத்துக்கு உத்வேகம் கொடுப்பதற்காகத் தான் ட்ரம்ப் இவ்வாறு செய்வதாக இருந்தால், தான் யாருக்காக போராடுவதாக அவர் உரிமைகோருகிறாரோ அந்த மக்களின் நலன்களே நீண்ட கால அடிப்படையில் பாதிக்கப்படும்.

(த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22