வெருகல் பிரதேசத்தில் புலனாய்வுத் துறையினர் எனக்கூறிக் கொண்டு பொதுமக்களைத் தொல்லைப்படுத்தும் குழு பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூதூர் தேர்தல் தொகுதியில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் குடிமனைக்கு இரவு நேரங்களில் சென்று தொல்லை கொடுக்கும் குழு வொன்று பற்றி கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் அப்பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 

இனந்தெரியாத குழுவினர் இரவு நேரங்களில் வாகனத்தில் வந்து உங்களை விசாரணை செய்ய வேண்டுமென அச்சுறுத்தியதுடன் பெண்களுக்கும் குடும்பஸ்தர்களுக்கும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.