உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : 152 மணி நேர வாக்குமூலம் வழங்கிய அரச உளவுத் துறை பிரதானி

11 Jul, 2020 | 09:00 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அரச உளவுத் துறையின் முன்னாள் பிரதானியும் தற்போதைய கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவிடம், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவு நீண்ட வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளது. 

16 நாட்களாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வாக்கு மூலம் 152 மணி நேரம் வரை தாக்கல் செய்யப்பட்டதாக குறித்த ஆணைக் குழுவின்  பொலிஸ் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார். 

நாளொன்றுக்கு எட்டரை முதல் ஒன்பதரை மணி நேரம் வரை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் இவ்வாரு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்  அவரிடம் அடுத்து வரும் சில நாட்களும் இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னர், அதன் பொலிஸ் பிரிவில்  ஆஜராகி வாக்கு மூலம் வழங்க வேண்டும்.

இந் நிலையிலேயே நிலந்த ஜயவர்தன இவ்வாரு வாக்கு மூலம் வழங்கி வருகின்றார். குறித்த தாக்குதல்கள் இடம்பெறும்போது அரச உளவுத் துறை பிரதானியாக நிலந்த ஜயவர்தன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09