சபாநாயகர் கருஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை  தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் மற்றும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. 

இந்த அறிக்கை தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தே சபாநாயகர் கருஜயசூரிய கணக்காய்வாளர் நாயகம் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். 

மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பிணைமுறி வழங்கல் குறித்த  கணக்காய்வாளர் நாயகத்தின் 1251 பக்கங்களைக்கொண்ட அறிக்கை அண்மையில் கோப் குழுவின் பிரதிநிதிகளிடமும் சபாநாயகரிடமும் கையளிக்கப்பட்டது. 

இதேவேளை, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.