அதிகாரத்திற்கு வரமுன்னதாகவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்' - ரணில்

10 Jul, 2020 | 09:47 PM
image

(நா.தனுஜா)

மின்சாரக்கட்டணத்திற்கு எமது அரசாங்கத்தில் நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்போம் என்று அண்மையில் நான் குறிப்பிட்டேன். நான் அவ்வாறு கூறிய பின்னர் மின்சாரக்கட்டணத்திற்கு நிவாரணமளிப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஆகவே நான் அதிகாரத்திற்கு வரமுன்னதாகவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி வைத்திருக்கிறேன். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுத்தருவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மஹர தேர்தல் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த சில மாதகால மின்சாரக்கட்டணத்திற்கு எமது அரசாங்கத்தில் நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்போம் என்று அண்மையில் நான் குறிப்பிட்டேன். நான் அவ்வாறு கூறிய பின்னர் மின்சாரக்கட்டணத்திற்கு நிவாரணமளிப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஆக நான் அதிகாரத்திற்கு வரமுன்னதாகவே ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி வைத்திருக்கிறேன். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுத்தருவேன்.

உலக சந்தையின் எரிபொருள் விலைக்கு அமைவாகவே மின்சாரக்கட்டணம் தயாரிக்கப்பட வேண்டும். எரிபொருள் விலை உலக சந்தையில் 50 சதவீதம் வரையில் குறைவடைந்திருக்கிறது. அவ்வாறிருக்க அந்த நிவாரணத்தை ஏன் நாட்டுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதே எமது கேள்வியாகும். அதேபோன்று மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. எனின் தற்போது மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதாகக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகியிருக்கிறது? அதேபோன்று நீருக்கான கட்டணமும் குறைக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய முடியாவிடின், அதற்குக் காரணம் பொதுஜன பெரமுனவின் கையறுநிலை மாத்திரமேயாகும். இப்போது அரசாங்கத்திடம் நிதியில்லாத காரணத்தினால் அனைத்து வழிகளிலும் நிதியைக் கொள்ளையடிக்க முற்படுகிறார்கள்.

கடந்த 1977 ஆம் ஆண்டிலிருந்து நான் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றேன். அன்று ஜே.ஆர்.ஜெயவர்தன நாட்டை முன்நிறுத்தி ஆரம்பித்த விரைவான அபிவிருத்தி நடவடிக்கைகளை நான் கண்டேன். வர்த்தக வலயம், மஹாவலி செயற்திட்டம், வீடமைப்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் அதிலடங்கும். இவையனைத்தும் அரச சேவையாளர்களினாலேயே சாத்தியமானது. எனினும் இன்றளவில் அரச சேவையாளர்களின் ஊதியத்தில் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கென எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சலுகைத்திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

2015 ஆம் ஆண்டில் நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்திருந்தது. நாடு பெற்றுக்கொண்ட கடன்களின் தவணைக்கொடுப்பனவைக் கூட மீளச்செலுத்த முடியாத நிலையே அப்போது காணப்பட்டது. எனினும் அரச சேவையாளர்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பின் மூலமாகவே அத்தகையதொரு நெருக்கடி நிலையை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது. மீண்டும் 2019 உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டது. எனினும் மீண்டும் அரச ஊழியர்களின் பங்களிப்புடன் அதனை சீரமைத்தோம்.

இந்நிலையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலை ஒருசில மாதங்களில் முடிவிற்கு வராது. மாறாக இது மீண்டெழுவதற்கு சுமார் இருவருடங்களாகும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கிறது. மேலும் சில அமைப்புக்கள் 3 வருடங்களாகும் என்று கூறியிருக்கிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் மக்களால் அவர்களது வாழ்க்கையைக் கொண்டுநடத்த முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அதேவேளை, மக்களின் பொருளாதார இயலுமையையும் வலுப்படுத்தக்கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே இருக்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04