தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் மக்களின் காணிகள் கபளீகரம்: ரிஷாத்

Published By: J.G.Stephan

10 Jul, 2020 | 04:11 PM
image

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும்,  தொல்பொருள் பிரச்சினை சில பிரதேசங்களில் தற்போது உருவெடுத்து வருகின்றது. சுமார் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு கஷ்டங்களையும் பல இன்னல்களையும்  வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்தனர். உயிர்களையும் உடைமைகளையும் இழந்தது மட்டுமின்றி, காணிகளைக் கூட இழந்திருக்கின்றனர். யுத்தம் முடிந்து தனது சொந்த இடங்களில் மீளக்குடியேறிய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். தொல்பொருளியல் என்ற போர்வையிலே, இந்த மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது.



பிரச்சினைகள் உள்ள இடங்களில் இதனை சாதுரியமாகத் தீர்த்து வைப்பது உரியவர்களின் பொறுப்பாகும்.

குறிப்பிட்ட பிரதேசத்தின் அரசியல்வாதிகள், சமூகத் தலைமைகள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதன் மூலம், இதயசுத்தியுடனும் நேர்மையுடனும் இதனைத் தீர்த்துக்கொள்ள முடியும். அதைவிடுத்து, இதனை பூதாகாரமாக்கி, இனங்களுக்கிடையிலான சச்சரவாக மாற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் இடமளிக்கக் கூடாது. அது நாட்டுக்கு நல்லதுமல்ல. இனவாதிகள் இதனை தூக்கிப்பிடித்துக்கொண்டு திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.” என்றார்.  

மேலும், “வன்னி மாவட்டத்திலே, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தரமான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. சஜித் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, இந்தப் பிரதேச மக்களின் வீடில்லாப் பிரச்சினையை தீர்த்துவைக்க, பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். பாகுபாடின்றி இதய சுத்தியுடன் பணியாற்றியவர். வன்னி மாவட்ட கிராமங்களுக்கு நாங்கள் செல்லும் போதெல்லாம் மக்கள் அவரது சேவைகளை நினைவுகூர்வதுடன், அதற்காக நன்றிக்கடன் செலுத்தவும் காத்திருக்கின்றனர்.

மேலும், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பரிணமித்துள்ளதால், தொலைபேசி சின்னத்துக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை வெல்லக்கூடிய வாய்ப்பு எமக்கு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11