( மயூரன் )

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பெண்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டியதாக மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரின் தாயார் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில்  நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அதனை அடுத்து இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் வழங்கினையும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

குறித்த இரு பெண்களில் ஒருவர் மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது  தயாரான மகாலிங்கம் தவராணி என்பவராவர் மற்றையவர் மற்றுமொரு சந்தேக நபரான சிவதேவன் துஷாந்தன் என்பவரின் தயாரான சிவதேவன் செல்வராணி என்பவராவார்.