அம்பாறை, நிந்தவூர் பகுதியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (04) திங்கட்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவினை நீதவான் எச்.எம்.முஹம்மட் பஸீல் பிறப்பித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அதே இடத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெறுவதற்காக அவரது சிகிச்சை நிலையத்திற்கு தந்தையுடன் சென்றுள்ளார். இதன்போது சிறுமியை தனியாக பார்வையிடும் அறையில் வைத்து வைத்தியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமியின் தந்தை சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் 20 ஆம் திகதி வைத்தியரை பொலிஸார் கைது செய்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.