கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை - சிறீதரன்

09 Jul, 2020 | 08:58 PM
image

 கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். உதயநகர் கிழக்கு மக்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 வடக்கு கிழக்கிலே தமிழர்கள் பூர்வீகக் குடிகள் அண்மையில் ஒரு தேரர் அவர்கள் கூறியிருக்கிறார் திருகோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறுகள் பற்றி கூறியிருக்கிறார். இந்த நாட்டில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள பௌத்த தேரர்களுக்கும் இலங்கையின் வரலாற்றினை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே இதற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கிறது. ஆனால் இலங்கை அரசு தனது இராணுவ பலத்தோடு இந்த நாட்டினுடைய வரலாறுகளை மாற்றத்துடிக்கிறது. தமிழர்களின் தேசம் எங்கும் இராணுவ சோதனைச்சாவடிகள் புதிதாக தோன்றியிருக்கிறது. இராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களை முடக்க நினைக்கிறார் 40 ஆண்டு கால இராணுவ சிந்தனையோடு இருக்கிற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள்.

இந்த நாட்டின் பல நிர்வாகத்துறைகளிற்கு தலைவர்களாக முன்னாள் இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றின் மூலம் தமிழர்கள் இராணுவ ஆட்சிக்குள் முடக்கப்படப்போகிறது என்பதை கட்டியம் கூறி நிற்கிறது. உலக நாடுகள் கொரோனா என்னும் கொடிய நோயின் காரணமாக உலக நாடுகள் அதிர்ந்து போய் சுகாதாரத் துறைகளை மேம்படுத்த எதிர்ப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்க இலங்கை அரசு மட்டும் தமிழர் தேசம் எங்கும் இராணுவத்தை குவித்து ஆணையிறவில் கனரக ஆயுதங்களை பொருத்தி கொரோனாவை கட்டுப்படுத்த முயன்றது.

பிரதமர் அண்மையில் கூறியிருக்கிறார் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கூறியிருக்கிறார். இவ்வாறாக நீக்கப்படுமானால் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமல் போகும். இவ்வாறாக ஏற்படப்போகும் ஆபத்துக்களை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்றால் தமிழர்கள் ஓரணியில் நின்றால் மாத்திரமே எதிர் கொள்ள முடியும். இந்த தேர்தல் வெறுமனே பாராளுமன்ற தேர்தலாக மட்டும் பார்க்காது தமிழர்களின் இருப்புக்கான தேர்தலாக நாம் நோக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08