10 ஆண்டுகளில் 2 இலட்சம் சூரிய சக்தி மின் கட்டமைப்புக்கள் நிறுவப்பட வேண்டும் - தொழிற்சங்கம்

09 Jul, 2020 | 07:42 PM
image

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற அரசாங்கத்தின் இலக்கை பூர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் 200 டெகாவோட் கூரை மேல் பொருத்தும் சோலார் பொருத்தப்பட வேண்டுமென சூரிய மின்சக்தி தொழிற்துறையினரின் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 2 இலட்சம் சூரிய சக்தி மின் கட்டமைப்புக்கள் நிறுவப்பட வேண்டியுள்ளதாக சூரிய மின்சக்தி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சூரிய மின்சக்தி தொழிற்சங்கம் மேலும் தெரிவித்திருப்பதாவது :

2030 க்குள் அரசாங்கத்தின் 80 வீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய கூரைக்கு மேல் பொருத்தப்படும் சோலார் மட்டுமின்றி நிலம் மற்றும் நீர்மேல் பொருத்தும் சூரிய மின்சக்தி (சோலார்) மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு மேலும் 9 ஜிகாவோட் சேர்க்க வேண்டும்.

அதன்படி மொத்த சூரிய திறன் 2030 இற்குள் 5 ஜிகாவாட்டாக அதிகரிக்கப்பட வேண்டும். இதுவரை சூரிய மின் திட்டங்களின் வளர்ச்சி மந்தமான நிலையில் காணப்படுகிறது. 2016 முதல் ஐந்தாண்டுகளில் தேசிய கட்டத்தில் 270 மெகாவோட் கூரை மேல் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

சுமார் சூரிய சக்தி கொண்ட வீடுகளின் எண்ணிக்கை இன்னும் 25,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. 2025 க்குள் ஒரு மில்லியன் சூரிய மண்டலங்களை நிறுவதே அரசாங்கத்தின் குறிக்கோள். அந்த இலங்கை எளிதில் அடைவதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

இதுவரை வெளியிடப்பட்ட தரவுகளின் படி இலங்கை மின்சார சபை நிலக்கரி மின் நிலையத்தின் ஒரு அலகுக்காக 22.50 ரூபா செலவிடுகின்ற அதே நேரம் டீசல் மற்றும் உலை எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஒரு அலகு மின்சாரத்திற்கு 37.12 ரூபாய் செலவு செய்து கொள்வனவு செய்கிறது.

எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் இந்த விலைகள் அதிகரிக்கும் போக்கு உள்ளது. புதைபடிவ எரிபொருட்கள் , நிலக்கரி மற்றும் டீசல் ஆகியவற்றின் முழுமையான இறக்குமதி காரணமாக இந்த செலவில் 75 சதவீதம் நாட்டிலிருந்து வெளியேறுகிறது. கூரை மேல் பொருத்திடும் சூரிய கட்டமைப்பு (சோலார்) மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை உள்ளுர் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் இந்த செலவானது பொருளாதார மற்றும் நாணய மாற்று வீதத்துக்கும் ஒரு சுமையாக இருக்காது.

நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சூரிய சக்தி கட்டமைப்புக்களை சுமார் 10 ரூபாய்க்கு இலங்கை மின்சார சபைக்கு கொள்வனவு செய்ய முடியும். அதன்படி புதைப்படிவ எரிபொருள் அடிப்படையிலான வெப்ப மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இறக்குமதி செய்வதன் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு நிதி இழப்புக்கள் முக்கியமாக உள்ளன என்பது தெளிவாகிறது.

சூரிய மின்சக்தியிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 5 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பது இலங்கை மின்சார சபைக்கு மட்டுமல்ல முழு பொருளாதாரத்திற்கும் தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57