தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது - சந்திரகுமார்

09 Jul, 2020 | 10:25 AM
image

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தங்களோடுதான் இருக்கின்றார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் கருத்து. தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீண்டும் இந்த தேர்தலில் ஏமாற்றுவதற்கு இவ்வாறான அறிக்கைகளை அவர்கள் விடுகின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்   தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,

பிராந்திய அரசியல் நலன்கள்சார்ந்து இந்தியா எப்பொழுதும் கொழும்போடுதான் இருந்துள்ளது. இன்றும் இருந்து வருகிறது. சர்வதேச நாடுகள்  அனைத்தும் ஏனைய நாடுகளின் எந்த விடயத்திலும் தலையிடுகின்ற போது  தங்களின் நலன்களிலிருந்து சிந்தித்தே முடிவுகளை எடுத்து வருகின்றனர். மாறாக அவர்கள் தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. 

யுத்தம் நிறைவுற்று கடந்த 10  வருடங்களாக  தமிழ் மக்களின் விடயத்தில் சர்வேதேச நாடுகளின் செயற்பாடுகள் இவ்விதமே இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் முன் சர்வதேசம் என்ற மாயமானை காட்டி வாக்குகளை பெற்று  தங்களின் வளப்படுத்திக்கொண்டார்களே தவிர தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உடனடி பிரச்சினைகளை கூட நிர்வத்தி  செய்யவில்லை.

 பிரதேசங்களின் அபிவிருத்தி,  இளம்  சமூகத்தின் வேலைவாய்ப்புகள், மக்களின் பொருளாதார முன்னேற்றம் போன்ற மக்களின் நாளாந்த வாழக்கை பிரச்சினைகளை கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. 2015 இற்கு பின்னர் கடந்த ஐந்து வருடத்தில் தமிழ் மக்கள்  ஒரு வெறுமைக்குள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிடுகின்ற 10 வேட்பாளர்களும் முடிந்தால் ஒரே மேடையில் ஒற்றுமையாக இருந்து ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்த முடியுமா? பத்து பேருக்குள்ளும் பத்துவிதமான கருத்துக்கள், ஒருவருக்கொருவர் குழிபறிக்கின்ற செயற்பாடுகள் கட்சிக்குள் அடிபாடுகள்,மாறிமாறி ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்துகின்றனர். நியாயமாக கேள்வி கேட்கின்றவர்களை கட்சியிலிருந்து விலக்குகின்றனர்.  

இவ்வாறு தங்களுக்குள்ளுள் ஒற்றுமையின்றி இருந்துக்கொண்டு தமிழ் மக்களை ஒற்றுமையாக தங்களுக்கு வாக்களிக்க கோருவது கேலிக் கூத்தான செயற்பாடு. கடந்த காலங்களிலும் இவர்களின் இவ்வாறான வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து பேரம் பேசும் பலத்தை வழங்கினார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மக்கள் வழங்கிய பேரம் பேசும் பலத்தை தங்களின் சுயலாப சுகபோக நலன்களுக்கு பயன்படுத்தினார்களே  தவிர மக்களுக்காக பயன்படுத்தவேயில்லை. 

இதனால்தான் கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி  சென்றுவிட்டனர். எனவே இனியும் இவர்களை நம்பி  இவர்களின் வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து போகக் கூடாது. மாறியிருகின்ற தமிழ் அரசியல் சூழலில்   மாற்றத்தை நோக்கி வாக்களிக்க வேண்டும். மக்களின் நலனில் நாம் கேடயமாக நின்று காப்போம். இதனை கடந்த கால எங்களின் செயற்பாடுகள் கட்டியம் கூறுகின்றது. எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44