செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதம்

Published By: Digital Desk 4

09 Jul, 2020 | 08:33 AM
image

வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் குறித்த சோதனை சாவடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மேஜர்  ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை (9)அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

வட மாகாணத்தில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.

 சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக குறித்து சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

மக்களின் அன்றாடச் செயல்பாடுகளும் பாதிப்படைந்து உள்ளது.

 அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் பயணங்களை மேற்கொள்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர்.

 மேலும் மீனவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் .

இந்த நிலையில் வட மாகாணத்தில் என்றுமில்லாத அளவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சோதனைச் சாவடிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் கூடிய கவனம் செலுத்தி வட மாகாண மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் இயல்பு நிலை  வழமைக்கு திரும்புவதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47