அரச ஊழியர்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - மனோகணேசன்

Published By: Digital Desk 3

08 Jul, 2020 | 05:10 PM
image

(செ.தேன்மொழி)

அரசாங்கம் அரச உத்தியோகஸ்தர்களின் மேலதிக கொடுப்பனவு மற்றும் விசேட கொடுப்பனவுகளை நிறுத்திவைத்து அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோகணேசன் , எதிர் வரும் பொதுத் தேர்தலுக்கான தபாற்மூல வாக்களிப்புகள் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்பட இருப்பதனால் , அரச ஊழியர்கள் தங்களது சம்பள விவகாரங்கள் தொடர்பில் நன்கு சிந்தித்து பார்த்தே வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரச உத்தியோகத்தர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பாலான சிங்கள அரச உத்தியோகத்தர்கள் வெறுப்படைந்துள்ளனர். இதில் தமிழ் மொழிபேசும் அரச உத்தியோகத்தர்களும் பங்குக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே விசேட கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தாலும் , நாங்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வரவுசெலவு திட்டத்தில் மூலம் ஒதுக்கிவைத்தை 2500 மூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் நிறுத்த முடிவெடுத்தப்போது நாட்டில் வைரஸ் பரவல் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. இருந்த போதிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான அரச ஊழியர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காகவே வாக்களித்திருந்தனர்.

இம்முறையும் இவ்வாறான ஒரு முடிவை எடுத்துவிட்டு பின்னால் வருந்துவதில் எந்த பயனும் கிடைக்காது . அதனால் நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முருகையா ரவிந்திரன் கூறியதாவது,

இன்று மலையக மக்கள் மாற்றத்தை எதிர்பார்துக் கொண்டே பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்க இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச உத்தியோகஸ்தர்கள் பணிகளுக்கு செல்லாமல் இருந்த போதிலும் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்குச் சமூகமளித்தன் பின்னரே ஊதியத்தை பெற்றுக் கொள்ள முடிந்திருந்தது.

பெருந்தோட்ட மக்களின் நன்மைக்கருதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதச பெரும் சேவைகளை செய்திருந்தார். தற்போது அவரது புதல்வன் சஜித் பிரேமதாசவும் அதேவழியில் செயற்பட்டு வருகின்றார். இவரின் ஊடாக மலையக மக்களுக்கு பல்வேறு நலன்தரும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதனால் , நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பெருந்தொகையான வேட்பாளர்களை தெரிவுச் செய்ய வேண்டும்.

கேள்வி: அமரர் ஆறுமுக தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் இம்முறை போட்யிடுவதால் எவ்வாறான சவால் காணப்படுகின்றது?

பதில் : எமக்கு எந்த சவாலும் இல்லை. வழமையாக அமரர் ஆறுமுக தொண்டமானுக்கு ஆதரவாக வழங்கப்பட்டு வந்த வாக்குகளை அவர் பெற்றுக் கொள்ளுவார். வேறு எந்த வகையிலும் எமக்கு சவால் ஏற்படாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55