ஆளும் தரப்புடன் இணைந்து செயற்படுவதென்பது சாத்தியமற்றது - வஜிர அபேவர்தன

Published By: Vishnu

08 Jul, 2020 | 04:44 PM
image

(நா.தனுஜா)

மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதென்பது சாத்தியமற்றதாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் டீல் ஒன்றைச் செய்து கொண்டிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். உண்மையில் ஒருபோதும் நாம் மஹிந்த தரப்புடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க மாட்டோம். ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதையே நாம் மிகமுக்கிய இலக்காகக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மஹிந்த தரப்பின் பொருளாதாரக் கொள்கைகளும், எமது பொருளாதாரக் கொள்கைகளும் முற்றிலும் முரணானவை. ஆகவே அவர்களுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதென்பது சாத்தியமற்றதாகும் 

அத்துடன் இம்முறை பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பின் போது அரச ஊழியர்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பது அவசியமாகும். ஆளுந்தரப்பினர் தமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத்தருமாறுகோரி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அத்தகைய பெரும்பான்மை நிச்சயமாகக் கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, அவர்கள் எதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றனர் என்பது குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் இன்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்துக் கேள்வியெழுப்பிய போது கட்சியின் வரையறைகளை மீறி செயற்பட்டவர்கள் உறுப்பினர்களை நீக்குவது பற்றியும், தேர்தல் பிரசார செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டதென்று பதிலளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51