காரைதீவு கடற்கரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காரைதீவு கடற்கரை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலே­யே மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த நால்வரும் படுகாயமடைந்த நிலையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்கா­க கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்­ள­னர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் மதுப் போத்தல்களும் கிடந்தன. வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி மதுபாவனையின் விளைவால் இவ்விபத்து சம்பவித்திருக்கிறதென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.