வடக்கின் முன்னேற்றத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான தக்கதருணமிது - சார்ள்ஸ்

Published By: Digital Desk 3

08 Jul, 2020 | 10:55 AM
image

வடமாகாண மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்குரிய தருணமிதுவாகும் என்றுவடக்கு ஆளநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்  சுட்டிக்காட்டியுள்ளார். 

வட மாகாணத்திலுள்ள மாடுகள் வளர்ப்பு, மேய்ச்சல் நிலப்பற்றாக்குறை, மாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளைக் அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆளுநர்  கருத்து தெரிவிக்கையில், 

வனத்துறை மற்றும் வன விலங்குத்துறைகளோடு இணைந்து மேய்ச்சல் நிலப்பரப்பினை விருத்திசெய்ய சம்மந்தப்பட்ட மாகாண அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாட்டுச்சந்தைகளை உருவாக்குவதன் மூலம் இடைத்தரகர்களையும் மோசடிகளையும் தவிர்த்து மாடுகளை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். 

வீதிகளிலும் தெருக்களிலும் மாடுகளை வளர்பதைத் தவிர்த்து தேவையான மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி கால்நடை வளர்ப்பை விரிவாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

அத்துடன் பாற்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு அதற்கான சந்தைப்படுத்துதலையும் விரிவுபடுத்தி மாகாண வளர்ச்சிக்கு ஒத்துழைப்புக்களை முன்னெடுப்பதற்குரிய செயற்பாடுகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.  

மேலும் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசும் பிரதமரும் வட மாகாண வளர்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்பையும் தருவதாக கூறியுள்ளனர்.

ஆகவே, எமது மாகாண மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் வேலைகளையும் நாம் முன்னெடுக்க வேண்டிய தருணமிதுவாகவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33