பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி!

Published By: Jayanthy

07 Jul, 2020 | 10:35 PM
image

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்செனரோ கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

President of Brazil Jair Bolsonaro speaks during the sworn in ceremony for newly appointed Minister of Communications Fábio Faria amidst the coronavirus (COVID-19) pandemic at the Planalto Palace on June 17 2020 in Brasilia.

இன்று, பிரேசிலிய தொலைக்காட்சியில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு பேசிய போல்செனரோ இதனை தெரிவித்துள்ளார்.

"கொரோனா தொற்றானது விரைவில் அல்லது பின்னர் மக்கள்தொகையில் கணிசமான பகுதியை தாக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது எனக்கு சாதகமானது" என்று அவர் திங்களன்று எடுத்த கொரோனா வைரஸ் பரிசோதனையைப் பற்றி குறிப்பிட்டார்.

போல்செனரோ திங்களன்று பிரேசிலில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஒரு பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அவரது நுரையீரல் "சுத்தமாக" இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போல்செனரோ கொரோனா வைரஸை ஒரு "சிறிய காய்ச்சல்" என்று கேலி செய்துள்ளதுடன் முன்னர் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களிலும் பேரணிகளிலும் பங்குபற்றியுள்ளார். அத்துடன் ஆதரவாளர்களுடன் மிக நெருக்கமாக பழகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் 65,000 க்கும் அதிகமானோர் கொரோனா  வைரஸால் இறந்துள்ளனர். அந்நாட்டின் சுகாதார அமைச்சு திங்களன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, பிரேசிலில் இதுவரை 1,623,284 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17