சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்கிளில் வட்டி வீதத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கவில்லை - பந்துல

Published By: Vishnu

07 Jul, 2020 | 05:32 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்கிளில் வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தீர்மானிக்கவில்லை. அவ்வாறான வதந்திகள் தொடர்பில் யாரும் கவலைப்பட வேண்டாம். மாறாக இவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த வரி நிவாரணம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் ஊடக அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிரேஷ்ட பிரஜைகள் தங்களின் வாழ்க்கையில் இளமை காலத்தில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணித்த சிரேஷ்ட பிரஜைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான விசேட வட்டி வீதம் எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் இதனை ஆரம்பித்துவைத்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்டுவந்த விசேட வட்டி வீதத்தில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. அது ஆரம்பிக்கப்பட்டது முதல் செயற்பட்ட பிரகாரமே தொடர்ந்து செயற்படுகின்றது.

என்றாலும் சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளுக்காக வழங்கப்பட்டுவந்த விசேட வட்டி வீதத்தில் குறைப்பு செய்துள்ளதாகவும் அவர்களின் வட்டி வருமானத்தின் அடிப்படையில் பெற்றுக்கொடுத்திருந்த வருமான வரி நிவாரணம் நீக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு சில ஊடங்களிலும் சமூக வலைத்தலங்களிலும் செய்தி பிரசுரமாகி இருக்கின்றது. அவ்வாறான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. எந்த அடிப்படையும் இல்லாமலே அந்த செய்தி பிரசுரமாகி இருக்கின்றது.

 அத்துடன் அரசாங்கத்தினால் அவ்வாறான எந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. இருந்தபோதும்  எமது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து வங்கி வட்டியின் அடிப்படையில்  அறவிடப்பட்டுவந்த, நிறுத்திவைக்கப்படுவதற்கான வரி நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதாந்த வட்டி வருமானம் இரண்டு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா ஏனின் வருடத்துக்கு 30 இலட்சம் ரூபா வரை வருமான வரியில் இருந்து விடுவித்திருக்கின்றோம்.

அதனால் தேர்தல் காலத்தில் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்இ அடிப்படையற்ற பிரசாரங்களினால் ஆத்தரமடைய வேண்டாம் என  நிலையான வைப்புக்களை பேணி வரும் சிரேஷ்ட பிரஜைகளிடம்  கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33