பள்ளிவாசல் உண்டியலை உடைத்து கொள்ளையிட்ட விளக்கமறியல்

Published By: Digital Desk 4

07 Jul, 2020 | 03:07 PM
image

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட பாலமுனையில் பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட 63 வயது நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் வினோபா இந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பாலமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் உண்டியலையே மேற்படி நபர் உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கெமராவின் உதவியுடனேயே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் வழிகாட்டலில் சந்தேக  நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02