வன்னி மாவட்டத்தில் வாக்குப்பெற்று வெளிமாவட்டத்திலுள்ளோருக்கு அரச வேலைவாய்ப்புகள்..!

Published By: J.G.Stephan

07 Jul, 2020 | 01:46 PM
image

வன்னி மாவட்டத்தில் பல இளைஞர்கள் , யுவதிகள் படித்து விட்டு வேலைவாய்ப்புக்களை நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருக்கையில் உங்களின் வாக்குக்களை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் வெளிமாவட்டங்களில் வசித்துவரும் அவர்களது உறவினர்கள் ஆதரவாளர்களுக்கு வன்னி மாவட்டத்தில் அரச தொழில்வாய்ப்புக்களை வழங்கிவருகின்றனர் . 

இதனால் இங்குள்ள படித்த இளைஞர்கள் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றியும் தகுதியான வேலைவாய்ப்புக்கள் இன்றியும் வசித்து வருகின்றனர்.

இவ்வாறு நேற்று வவுனியா சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது வன்னி மக்கள் காப்பகத்தின் தலைவரும் சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளருமான நீல் சாந்த தெரிவித்துள்ளார் .

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , 

நாங்கள் இங்கு கல்வித்திட்டங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது ஆரம்பப்பிரிவு முன்பள்ளி ஆசிரியர்களின் அடிமட்ட செயற்பாடுகளை மையப்படுத்தியும் கட்டியமைக்கும் பணிகளை செயற்படுத்தி வருகின்றோம். தேர்தலின் பின்னர் எனது சொந்த நிதியையும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டும் நிதியையும் சேர்த்துக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை அதிகமாக செய்து கொள்ள முயற்சித்துவருகின்றேன் . 

இக்கலந்துரையாடலில் நீங்கள் கலந்து கொண்டபோதும் உங்களுடைய கிராம பொதுத் தேவைகளை முன்வைக்கவும் நீங்கள் எதிர்பார்த்து வந்துள்ளீர்கள் இங்குள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களையும் உங்களுடைய கிராமங்களின் தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றோம் . 

அத்தோடு, இங்குள்ள படித்த இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் இன்றியும் படித்த வேலைக்கு தகுதியற்ற வேலைகளையும் செய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04