சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் இரண்டாவது புனித நகரமாக கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி பள்ளிவாசலுக்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியதோடு, ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக  சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நேற்றைய தினத்தில் சவுதியில் நடந்த 3 ஆவது குண்டுத்தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியுள்ளதோடு, தற்கொலை குண்டுத்தாரி குண்டை வெடிக்கச்செய்யும் போது பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த ஐந்து பேர்  காயமடைந்துள்ளனர்," என சவுதி உள்துறை அமைச்சின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தற்கொலை குண்டுதாரி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்துல்லாஹ் கான் (வயது 35) என்றும், இவர் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன் ஜித்தா நகரில் வசித்துவந்துள்ளமை அவரின் அடையாள அட்டை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதலை ஜ.எஸ் தீவிரவாதிகள் நடத்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றனர்.