சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி பள்ளிவாசலுக்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த இத்தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் மேலும் பலர் காயமடைந்து இருக்கக்கூடுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பள்ளிவாசலில் முகமது நபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை முஸ்லிம் மக்கள் புனித ரமழான் பண்டிகைக்கு தயாராகும் நிலையில் அவர்களின் புனித பூமியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.