குசல் மெண்டீஸுக்கு பிணை!

Published By: Vishnu

06 Jul, 2020 | 12:03 PM
image

வாகன விபத்து தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துரை நீதிவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் ஒரு மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய காலி வீதி - ஹொரேதுட்டுவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கார் ஒன்று பாதசாரதி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்போது மொரட்டுவ பகுதியிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற கார் பாதசாரதி மீது மோதியுள்ளதுடன் , படுகாமடைந்த பாதசாரதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , விபத்து தொடர்பில் காரின் சாரதியான கிரிக்கட் வீரர் குசல் மெண்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குசல் மெண்டீஸ் விபத்து ஏற்படும் போது மதுபோதையில் இருந்துள்ளாரா ? என்பதை கண்டறிவதற்காக அவரது இரத்தமாரிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், பாணந்துரை பொலிஸார் அவரை கைதுசெய்திருந்தனர்.

எனினும் விபத்தின்போது மெண்டீஸ் மதுபானம் எதையும் உட்கொள்ளவில்லை என மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22